முடிந்தது சகாப்தம்.. கடைசி தீபாவளி.. மக்களுக்கு விடைகொடுக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம்!
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் இந்த தீபாவளிக்கு கடைசியாக ஒருமுறை மக்களை தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப உள்ளது. அடுத்த சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்.. எப்படி புக் செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

புக்கிங் மையங்கள்: தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த மையங்களில் நேரடியாக சென்று புக் செய்ய முடியும். உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே 10 மையம் உள்ளது. இங்கே சென்று பணம் கொடுத்து புக் செய்ய முடியும்.
பேருந்து நிலையங்கள்: ஆனால் பேருந்துகள் பெரும்பாலும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படவில்லை.
சென்னை; தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் (09/11/2023 முதல்
பேருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
1. மாதவரம் புதிய பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி. ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள். 2. கே.கே. நகர் மா.போ.பேருந்து நிலையம்: ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
3. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ)
அ) திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.
ஆ) தாம்பரம் இரயில் நிலையம் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்,
பேருந்து நிறுத்தம்: போளூர். சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
4. பூவிருந்தவல்லிபேருந்து நிலையம்: பைபாஸ் வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம் சாலை பேருந்து நிறுத்தம் செய்யாறு. ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் பூவிருந்தவல்லி மாநகரதிருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள். போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்)
5. கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்: மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர. இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை நிலையம், அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை. தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி. புதுக்கோட்டை. திண்டுக்கல். விருதுநகர், திருப்பூர், ஈரோடு. ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு) இங்கிருந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோயம்பேடு முடிகிறது: இந்த நிலையில்தான் கோயம்பேடு பேருந்து நிலையம் இந்த தீபாவளிக்கு கடைசியாக ஒருமுறை மக்களை தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப உள்ளது. அடுத்த சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும். இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது.
கிளாம்பாக்கம்: கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வர உள்ளது. பொங்கலுக்கு முன் இந்த பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வர உள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த பேருந்து நிலையம் சமீபத்தில் பெய்த மழையில் வெள்ளத்தில் மூழ்கியது.
இதன் காரணமாக அங்கே தண்ணீர் வெளியேற்றும் அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் வெளியேற்றுவதற்கான வெள்ள நீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த பணிகள் முடிந்த பின் அங்கே மீண்டும் புதிய சாலைகள் போடப்படும்.
அங்கே சாலைகள் போடப்பட்ட பின் மீண்டும் ஒருமுறை சோதனைகள் செய்யப்பட்ட பின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும். இந்த நிலையில்தான் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும்.












Click it and Unblock the Notifications