ராத்திரி பகலா உழைச்சு உதவி பன்றேன்.. 1 ரூபாய் கூட இதுவரை யாருகிட்டயும் வாங்குனதில்ல.. பாலா சுளீர்
சென்னை: நடிகர் கேபிஒய் பாலா முதல் முறையாக நாயகனாக நடித்திருக்கும் 'காந்தி கண்ணாடி' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் ஏழை மக்களுக்கு உதவுவதை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் உழைத்த பணத்தில் மட்டுமே பிறருக்கு உதவுவதாகவும். இதுவரை யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்கியதில்லை என உருக்கமாக பேசி உள்ளார் பாலா.
சின்னத்திரையில் இருந்து குறிப்பாக விஜய் டிவியில் இருந்து திரையுலகுக்கு ஏராளமானோர் வந்திருக்கின்றனர். நடிகர் சந்தானம். சிவகார்த்திகேயன். யோகி பாபு என பலரை சொல்லலாம். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது நாயகன் அவதாரம் எடுத்திருக்கிறார் கேபிஒய் பாலா.
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமான பாலா அதற்குப் பிறகு. அந்த தொலைக்காட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தொடர்ந்து சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தார்.

காந்தி கண்ணாடி
தற்போது அவர் நாயகனாக நடித்திருக்கும் காந்தி கண்ணாடி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஷெரிஃப் இயக்கத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டருடன் நாயகனாக கேபிஒய் பாலா நடித்துள்ளார். நேற்று படம் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்களிடம் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் படத்தை பார்த்து பாராட்டினார்.
கேபிஒய் பாலா
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கேபிஒய் பாலா படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் மிகவும் சிரமப்பட்டோம். சில தியேட்டர்களில் போஸ்டர் பேனர் வைக்க அனுமதிக்கவில்லை. படம் அந்த தியேட்டரில் ரிலீசாகியும் போஸ்டர் இல்லாததால் படம் இந்த தியேட்டரில் ஓடவில்லை என பலர் சென்று விட்டனர். இந்த நிலையில் இந்த படம் தற்போது ரசிகர்கள் வரவேற்பு பெற்று இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
கேபிஒய் பாலா பதில்
மேலும்," நான் பிறருக்கு உதவுவது குறித்து சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். பாலாவுக்கு எப்படி பணம் கிடைக்கிறது? யாரிடமும் வசூல் செய்கிறார்? என்றெல்லாம் விமர்சனங்கள் வருகிறது. உண்மையில் நான் கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் உதவி என்று கூட சொல்ல கூடாது எனது சொந்த பணத்தில் கடமையை செய்து வருகிறேன். இதுவரை அதற்காக தான் என்னுடைய சொந்த பணத்தை மட்டுமே செலவு செய்திருக்கிறேன். இதுவரை யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்குவதில்லை. இனிமேலும் வாங்க மாட்டேன். என்னை விமர்சிப்பவர்களுக்கு மக்களை பதில் சொல்வார்கள்" எனக் கூறி இருக்கிறார்.
கேபிஒய் பாலா உதவி
விஜய் டிவியில் பணியாற்றிய போதிலிருந்தே ஏழை எளிய மக்களுக்கு மாணவர்களுக்கும் உதவி செய்வதை பாலா வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், பெண்கள் என பலருக்கும் இருசக்கர வாகனங்கள், ட்ராக்டர், எழுது பொருட்கள், கல்லூரி கட்டணம் என தொடர்ந்து உதவி செய்து வருகிறார் பாலா. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாலாவின் செயல் குறித்து சமூக வலைதளங்களில் நெகட்டிவ் கமெண்ட்களை பார்க்க முடிந்தது. குறிப்பாக இலவச மருத்துவமனையை அவர் கட்டி வரும் நிலையில் அவர் யாரிடமோ பணம் வசூல் செய்கிறார் என்ற விமர்சனத்தை சிலர் முன் வைத்தனர். அதற்கு பதிலடியாகத்தான் தற்போது பாலா இந்த பதிலை அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications