KPY Palani: எனது மனைவி பிராமண பெண்! 3 முறை திருமணம்! கேபிஒய் பழனி ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் கலக்க போவது யாரு எனும் நிகழ்ச்சியில் பிரபலமடைந்தவர் கேபிஒய் பழனி. இவருடைய மனைவி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராம். இவர்தான் பழனியை மீடியாவுக்கு அனுப்பிவைத்தாராம். இதை பழனி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பழனி, ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது மனைவி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். நான் M.A., M.Phil & Ph.D படித்துள்ளேன். எனது மனைவி M.Com, Ph.D படித்துள்ளார். நாங்க ரெண்டு பேருமே பேராசிரியர்கள்.

chennai kpy palani

நாங்கள் இருவரும் நிறைய தடைகளை தாண்டி திருமணம் செய்து கொண்டோம். உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கன்னு மனைவிதான் என்னை மீடியாவுக்கு அனுப்பி வைத்தார். என்னோட இந்த நிலைக்கு முழு தகுதியும் ஒருத்தருக்கு இருக்குனா அது என்னோட மனைவிக்கு மட்டும்தான் இருக்கு. இவ்வாறு பழனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் கலக்க போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் நகைச்சுவையில் கலக்கினார். இவர் அறந்தாங்கி நிஷாவுடன் இணைந்து அனைவரையும் சிரிக்க வைத்தார். இவர் வேதாரண்யத்தில் பிறந்தவர்.

ஸ்டான்ட் அப் காமெடியனாக 400-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் திரைப்பட நட்சத்திரமாகவும் மாறிவிட்டார். இவர் ஒரு பட்டிமன்ற பேச்சாளரும் ஆவார். இவர் கனா காணும் காலங்கள் சீரியலின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார்.

அது போல் சீமராஜா, மாவீரன், பாபா பிளாக் ஷீப் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பட்டிமன்றங்களில் தனது நகைச்சுவை ததும்பும் பேச்சால் ஏகப்பட்டவர்களை கவர்ந்துள்ளார். மனைவி சங்கீதாவுடன் மேடைகளில் காமெடியில் பழனி கலக்கியுள்ளார்.

2000ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் இருந்து சென்னை வந்த பழனி, திநகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பேச்சு போட்டியில் மனைவி சங்கீதாவை பார்த்து தனது காதலை சொன்னாராம். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் பதிவு திருமணம் செய்து கொண்டு பிறகு விஷயத்தை ஊரில் சொல்லி அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனராம்.

தனது மனைவியை 3 முறை திருமணம் செய்தாராம். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். செந்தில் கவுண்டமணி போல் பழனி அறந்தாங்கி நிஷா காமெடியில் கலக்கினார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து காமெடி செய்தது வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. பொதுவாக கணவன் மனைவி, வாத்தியார் மாணவர் போன்ற ஜோக்குகளையே பழனி சொல்வது வழக்கம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+