கோகுலாஷ்டமி.. உங்கள் வீட்டு கிருஷ்ணர், ராதையை உலகத்திற்கு அறிமுகப்படுத்துங்கள்
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை அனைவரின் வீடுகளிலும் கொண்டாடப்படும் சந்தோஷத் திருவிழா. கிருஷ்ண ஜெயந்தி நாளில் உங்கள் வீட்டு, கண்ணன், ராதையை நாங்கள் உலகத்திற்கு அறிமுகம் செய்கிறோம். கிருஷ்ணர், ராதை வேடமிட்ட புகைப்படங்களை எங்களுக்கு அனுப்புங்கள்.
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் அனைவராலும் விரும்பி கொண்டாடப்படும் அவதாரங்களில் கிருஷ்ண அவதாரமும் ஒன்று. ஆவணி மாதத்தில் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் பகவான் கிருஷ்ணன் அவதரித்தார் என்கிறது புராணம். வாசுதேவர் - தேவகியின் 8வது பிள்ளைதான் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணரின் பிறப்பை பஜன்கள் பாடியும், பகவத் கீதையிலிருந்து ஸ்லோஹங்களைப் படித்தும் மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். கிருஷ்ணரின் பிறப்பை கிருஷ்ண ஜெயந்தி. ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

வீடுகளை அலங்கரித்து கிருஷ்ணரின் பாதம் வரைந்து முறுக்கு, சீடை, அவல் பாயாசம், வெண்ணை ஆகியவற்றை கண்ணனுக்கு படைத்து மக்கள் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவார்கள். தங்களின் வீடுகளில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டும், பெண் குழந்தைகளை ராதையாக அலங்கரித்தும் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒன் இந்தியா தமிழ் இணைய தளமும் கொண்டாட தயாராகி வருகிறது. உங்கள் வீடுகளில் உலா வரும் கிருஷ்ணர், ராதையை உலகத்திற்கு அறிமுகப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டு, கிருஷ்ணன், ராதையின் புகைப்படங்களை அவர்களின் பெயர்களுடன் [email protected] என்ற மெயில் ஐடிக்கு அனுப்புங்கள். உங்கள் ஊருக்கு மட்டுமே தெரிந்த உங்கள் பிள்ளைகளை நாங்கள் உலகத்திற்கே அறிமுகம் செய்கிறோம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications