சின்னக்கண்ணன் அழைக்கிறான்... களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி - வீட்டிற்குள் வந்த கண்ணன்கள்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீட்டிற்குள் சின்னக்கண்ணன் வந்து விளையாடினர். ஏராளமானோர் தங்கள் வீட்டின் பிள்ளைகளுக்கு கண்ணனைப் போலவும் ராதையைப் போல அலங்கரித்தும் கொண்டாடினர்.
சென்னை: பண்டிகை காலம் வந்தாலே கொண்டாட்டம்தான் அதுவும் கிருஷ்ண ஜெயந்தி என்றாலே கேட்கவே வேண்டாம் நம் வீட்டு பிள்ளைகளுக்கு. அன்றைய தினம் அவர்கள்தான் ஹீரோக்கள். கண்ணனைப் போல அழகாய் அலங்கரித்து கொண்டாடுவார்கள். விதம் விதமான பலகாரங்களை ருசிக்கலாம். இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமானோர் தங்களின் வீட்டுப்பிள்ளைகளை கிருஷ்ணனைப் போல அலங்கரித்து ஜென்மாஷ்டமியை கொண்டாடினர்.
ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் சிறையில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். கடவுள் அவதாரம் எல்லாமே மனிதர்களை காப்பதற்காகத்தான். கம்சனை அழிப்பதற்காக மட்டுமே கண்ணனின் அவதாரம் நிகழவில்லை. பாண்டவர்களுக்கு உதவி செய்யவும், பல ஆயிரக்கணக்கான கோபியர்களுக்கு முக்தி கொடுக்கவும் அவதரித்தவர் கண்ணன்.
கண்ணனின் புல்லாங்குழல் இசைக்கு மயங்கிப்போய் இருக்கிறது இந்த உலகம். குட்டிக்கண்ணன் குறும்புக்காரன் மட்டுமல்ல வெண்ணெய் திருடித்தின்றவன், மண்ணைத்தின்று அம்மாவிடம் அடி வாங்கியதோடு இந்த உலகமே தன்னுள்தான் இருக்கிறது வாயை திறந்து காட்டி
யசோதை அன்னையை மயக்கமடையச் செய்தவன் கண்ணன்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
அந்த கண்ணன் செய்த லீலைகளை சொன்னால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதனால்தான் கண்ணனின் அவதார தினம் ஜென்மாஷ்டமியாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில்களில் பெரிய அளவில் கொண்டாடப்பட விட்டாலும் அனைவரின் வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா களைகட்டியது.

கண்ணன் பிறந்தான்
கண்ணன் பிறப்பு கொண்டாடப்பட வேண்டியது என்பதால்தான் நம்முடைய பிள்ளைகளின் பிறந்தநாளைப் போல ஒவ்வொரு தாய்மார்களும் தங்களின் பிள்ளைகளை கண்ணனாக அலங்கரித்து கொண்டாடுகின்றனர்.இதே இந்த கண்ணன் தலையில் மயிலிறகு சூடு உள்ளம் கவர் கள்வனாக காட்சி தருகிறான்.

லீலை செய்யும் கண்ணன்கள்
கண்ணனின் லீலைகளை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம், அப்படித்தான் எங்கள் வீட்டுக்கண்ணனும் என்று அலங்கரித்து இருக்கிறார் ஒரு அம்மா. பாருங்கள் பார்க்க பார்க்க அழகாய் இருக்கிறார் இந்த கண்ணன்.

மயக்கும் குழல் இசை
கண்ணனின் புல்லாங்குழல் இசை அனைவரையும் மயக்க வைக்கும். இதே இந்த கண்ணனும் கோபியர்களை மயக்க கையில் புல்லாங்குழல் வைத்திருக்கிறார்.

செல்லக்கண்ணன்கள்
கண்ணன் போல வேடமிருக்கும் எல்லோருமே செல்லக்கண்ணன்கள். இதே இந்த கண்ணன்கள் ஆடிப்பாடி பாடி எல்லோரையும் மகிழ்விக்கின்றனர். குட்டிக்கண்ணன்களை பார்க்க பார்க்க நமக்கும் மகிழ்ச்சிதானே.

அன்பானவன் கண்ணன்
கண்ணன் அன்பானவன், அமைதியின் சொரூபம். ஐந்து தலை நாகத்தின் மீது நர்த்தனமாடுபவன். இதோ அமைதியாக இங்கே அமர்ந்திருக்கிறான். கண்ணனை பாருங்கள் நீங்களும் கொண்டாடுங்கள்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications