சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்
சென்னை: சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்ததையடுத்து இன்று நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 24 இல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர் மகாதேவன் பதவியேற்றார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இரண்டு காலிப்பணியிடங்கள் இருந்தது. மொத்தம் உள்ள 34 இடங்களில் 2 இரண்டு இடங்களை நிரப்புவதற்காக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் ஆர். மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங் ஆகிய இருவர் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன குழுவான கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து காலியான சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி இடத்திற்கு கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி ஆர் மகாதேவன் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 1989 ஆம் ஆண்டு வழக்கறிஞராக இவர் பதிவு செய்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் வழக்குகளில் வாதாடியுள்ளார்.
தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் ஆயிரக்கணக்கான வழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
-
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications