திமுக மேலதான் விஜய்க்கு கண்..ஜெயலலிதா தப்பே பண்ணலையா! அதையும் பேசுங்க சிஎம்! ஹிண்ட் கொடுத்த டாக்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சிக் காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைப் போலவே, அதிமுக ஆட்சிக் காலங்களிலும் ஊழல் தொடர்பான வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இருந்தது எனவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான டான்சி வழக்கு, பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு என பல உள்ளது. அதைப் பற்றியும் விஜய் பேசியிருக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், அவரது தலைமையிலான அரசின் முதல் சட்டப்பேரவைத் தொடரின் நிறைவாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரை குறித்து கருத்து தெரிவித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் அவரது பதில் அமையவில்லை என்று விமர்சித்தார்.

Dr Krishnasamy Vijay DMK

டாக்டர் கிருஷ்ணசாமி

சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பொருள் மற்றும் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் விரிவாக விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அரசு எடுக்கவுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரின் பதிலுரையில் போதிய விளக்கம் இல்லை. கொலை, கொள்ளை, போதைப்பொருள் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு?

முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் வலுவான காவல்துறை கட்டமைப்பு இருந்தபோதிலும், புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்படும் சம்பவங்கள், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பிரச்னைகளும் தொடர்வதாகக் கூறிய அவர், இவற்றைத் தடுப்பதற்கான தெளிவான நடவடிக்கைகள் குறித்து அரசு தெரிவிக்க வேண்டும்.

சட்டப்பேரவை

ஒரு குற்றம் நடந்த பிறகு வழக்குப்பதிவு செய்வதும், கைது செய்வதும் மட்டும் ஒரு அரசின் கடமை அல்ல. குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் ஆட்சியின் முக்கியமான பொறுப்பு. விஜய்யின் கவனம் முழுவதும் திமுக மீதே இருந்தது. முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவை உரை பெரும்பாலும் திமுகவை விமர்சிப்பதிலேயே கவனம் செலுத்தினார். 2026 தேர்தலில் திமுக ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

திமுக

ஆனால், சட்டப்பேரவையில் மீண்டும் மீண்டும் திமுகவை மட்டுமே குறிவைத்து பேசுவது மக்களின் தற்போதைய கேள்விகளுக்குப் பதிலாக அமையாது. தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு என்பது முக்கியமான பிரச்சனைதான் என்றாலும், அதை திமுகவுக்கு மட்டுமே தொடர்புபடுத்திப் பேசுவது சரியல்ல. ஊழல் என்றால் எந்தக் கட்சி செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக் காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைப் போலவே, அதிமுக ஆட்சிக் காலங்களிலும் ஊழல் தொடர்பான வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இருந்தது.

ஜெயலலிதா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான டான்சி வழக்கு, பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு என பல உள்ளது. ஊழலை ஒழிப்பது உண்மையிலேயே அரசின் லட்சியமாக இருந்தால், திமுக செய்திருந்தாலும், அதிமுக செய்திருந்தாலும் அல்லது வேறு யார் செய்திருந்தாலும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்று முதலமைச்சர் கூறியிருக்க வேண்டும். அதுதான் நடுநிலையான நிலைப்பாடாக இருந்திருக்கும்.

எதிர்க்கட்சிகள்

முதலமைச்சரின் பேச்சு மரபு சார்ந்த சட்டப்பேரவை நடைமுறைக்கு மாறாக, சினிமா பாணியில் அமைந்திருந்தது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, அதற்கு பதிலளிப்பது ஆளுங்கட்சியின் கடமை. அவர்களைத் தொடர்ந்து குற்றவாளிகள் என்று கூறி ஆவேசப்படுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டாலும் முதலமைச்சர் நிதானத்தை இழக்கக்கூடாது என்றும், தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக அவர் செயல்பட வேண்டும்" என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+