காங்கிரஸ் தலைவர் மாற்றம் என்பதில் உண்மையில்லை.. பட்டென சொன்ன கே.எஸ்.அழகிரி.. மேலிடத்தில் செம பவராம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறார் என்ற செய்தியில் உண்மையில்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் கடந்த 4 ஆண்டுகளாக இருக்கும் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என கடந்த ஓராண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு புதிய தலைவர் யார் என்கிற அறிவிப்பு வெளியாகும் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை அல்லது சசிகாந்த் செந்தில் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டால், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை கே.எஸ்.அழகிரி நேற்று பெங்களூரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கே.எஸ்.அழகிரியுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் பெங்களூருக்குச் சென்றனர். அவர்கள் கே.எஸ்.அழகிரியே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த நிலையில், சந்திப்பு முடிந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறார் என்ற செய்தியில் உண்மையில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், தன்னுடன் வந்தவர்கள் தன்னுடைய ஆதரவாளர்கள் அல்ல அவர்கள் தனது 50 ஆண்டுகால நண்பர்கள் என்றும், மல்லிகார்ஜுன கார்கேவுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் தலைவர் மாற்றம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றும் கேஎஸ் அழகிரி தெரிவித்தார்.
கேஎஸ் அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் தலைமையில் தமிழக காங்கிரஸ் சந்தித்த நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே கேஎஸ் அழகிரிக்கு டெல்லி மேலிடத்தில் நல்ல அபிப்ராயம் இருக்கிறதாம். இதனால், அவரை மாற்றும் முடிவு இப்போதைக்கு இல்லை என அழகிரி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம்











Click it and Unblock the Notifications