அவ்வளவு வெறி.. பாஜக தனக்குத்தானே புதைகுழியை தோண்டிக்கொள்வதில் பிஸியாக உள்ளது.. கேஎஸ் அழகிரி அட்டாக்!
சென்னை : சர்வாதிகாரிகள், தோல்வியடைய தோல்வியடைய வெறிகொண்டு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அதைத்தான் பிரதமர் மோடியும் செய்து கொண்டிருக்கிறார். பாஜக தன்னுடைய புதைகுழியை, தானே தோண்டிக்கொள்வதில் ஆர்வமாக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை தெரிவித்து தமிழ்நாடு உட்பட, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் இன்று சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் போராட்டம்
மோடி குறித்து கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சத்தியாகிரக போராட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டு இருந்தது.

நாடு முழுவதும்
அதன்படி ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கத்தைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் உட்பட 69 இடங்களில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அடக்குமுறையை ஏவி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, "மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும் இதுபோன்ற பிரச்சனைகள் வந்தன. அப்போது மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தைச் சந்தித்திருக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார். எந்த குற்றச்சாட்டையும் எதிர்கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியும் அதுபோல எதிர்கொள்ள வேண்டியதுதானே. ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசினால் அதற்கு ஆளும்கட்சி பதில் அளிக்க வேண்டும்.
ஆனால் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் அடக்குமுறையை ஏவி வரும் மோடி அரசு எதிர்கட்சிகளின் குரல்வளையை நெரித்து வருகிறது.

கேள்வி கேட்டதற்காக
எந்தவொரு தவறான விஷயத்தையும் ராகுல் காந்தி சொல்லவில்லை. உண்மைக்கு புறம்பான விஷயங்களை அவர் சொல்லவில்லை. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார். தன்னைப் பார்த்து ராகுல்காந்தி கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விட மாட்டேன் என்று சொல்வது என்ன ஜனநாயகம்? ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் இதைத்தான் செய்தனர். இன்றைக்கு மோடியும் அதைத்தான் செய்கிறார்.

புதைகுழியை தோண்டுகிறது
இந்த நாடு ஜனநாயக நாடு. பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து உரிமை உள்ள நாடு. ராகுல் காந்தி சிறு குழந்தை அல்ல, விளையாட்டுப் பிள்ளை அல்ல. வாழ்க்கையில் பலவற்றை துறந்து இந்த அரசியலுக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி எதையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளார். எப்போதுமே சர்வாதிகாரிகள், தோல்வியடைய தோல்வியடைய வெறிகொண்டு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அதைத்தான் பிரதமர் மோடியும் செய்துகொண்டிருக்கிறார். பாஜக தன்னுடைய புதைகுழியை, தானே தோண்டிக்கொள்வதில் ஆர்வமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications