“நேக்காக” வென்ற பாஜக.. அதிக ஓட்டு வாங்கியும் காங்கிரஸ் தோற்றது எப்படி? அழகிரி வெளியிட்ட டேட்டா இதோ
சென்னை: 5 மாநில தேர்தல்களில் மொத்தமாக பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகளை பெற்றும் தோல்வியடைந்து இருப்பதை எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
5 மாநில தேர்தல் தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது, "தோல்வி அல்ல, எச்சரிக்கை.. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் 4.81 கோடி வாக்குகள் பெற்ற பா.ஜ.க. 342 இடங்களையும், 4.92 கோடி வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 235 இடங்களையும் பெற்றுள்ளன. பத்தரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை கூடுதலாக பெற்ற காங்கிரஸை போல சற்றேறக்குறைய ஒன்றரை மடங்கு சட்டமன்ற இடங்களை பா.ஜ.க. பெற்றுள்ளது.

இது தான் இன்றைய தேர்தல் முறையில் வெற்றி தோல்விகள் அமைகின்றன. இதில் உண்மை நிலை என்னவென்றால் இன்றைய தேர்தல் முறையில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. மாறாக, தேர்தல் கணக்குகளை சரியாக கையாள தெரிந்தவர்களே வெற்றி பெறுகிறார்கள். இத்தகைய வெற்றியை தான் பா.ஜ.க. பெற்றிருக்கிறது.
எனவே, மக்கள் பா.ஜ.க.வுக்கு பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள் என்ற கருத்து மிக மிக தவறானது. ஆனாலும் இது தோல்வியாக இல்லையென்றாலும் முடிவுகளை எச்சரிக்கையோடு காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டும். கீழே உள்ள அட்டவணை காங்கிரஸ் - பா.ஜ.க.வின் பலத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது." என்று குறிப்பிட்டு 5 மாநிலங்களில் 2 கட்சிகளும் பெற்ற வாக்கு எண்ணிக்கையை பதிவிட்டு உள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் 1,46,113 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்று உள்ளது. வெறும் 35,524 வாக்குகளை பெற்ற பாஜக 2 தொகுதிகளில் வென்று இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 66,02,586 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. சற்று அதிகமாக 72,34,968 வாக்குகளை பெற்ற பாஜக 54 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்து உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 1,75,71,582 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 66 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. 2,11,16,197 வாக்குகளை பெற்ற பாஜக 163 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்து இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 1,56,67,947 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 69 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. 1,65,24,787 வாக்குகளை பெற்ற பாஜக 115 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்து உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 92,35,792 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. 32,57,511 வாக்குகளை பெற்ற பாஜக 8 தொகுதிகளில் வென்று இருக்கிறது. மொத்தமாக 5 மாநிலங்களிலும் 4,92,24,020 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 235 இடங்களில் வெற்றிபெற்று ஒரு மாநிலத்தில் மட்டுமே ஆட்சியை பிடித்து உள்ளது.அதை விட குறைவாக 4,81,68,987 வாக்குகளை பெற்ற பாஜக 342 தொகுதிகளில் வென்று 3 மாநிலங்களில் ஆட்சியை பிடித்து உள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications