66 பதவிகளுக்கு 1.36 லட்சம் பேர் போட்டி... தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம் -காங்.
சென்னை: தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
66 பதவிகளுக்கு 1.36 லட்சம் பேர் போட்டியிடும் சூழல் தமிழகத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அந்நிய முதலீடு
இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியிலும், அந்நிய முதலீடுகள் பெறுவதிலும் தமிழகம் முதன்மை இடத்தில் இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சாதனையாகக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், தமிழகத்தின் கள நிலவரத்தை ஆய்வு செய்தால் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் தான் ஏற்படுகிறது. அதற்குப் பல உதாரணங்களைச் சான்றாகக் கூறமுடியும்.

1.36 லட்சம் பேர் போட்டி
நேற்று துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 பதவிகளுக்கான குரூப் - 1 முதல்நிலை தேர்வுக்கு 2 லட்சத்து 56 ஆயிரத்து 954 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 1 லட்சத்து 31 ஆயிரத்து 264 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 51.08 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1 லட்சத்து 25 ஆயிரத்து 690 பேர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் தேர்வு எழுத வரவில்லை. இதன்படி 66 பதவிகளுக்கு 1.31 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதனால் ஒரு பதவிக்கு 1,989 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைவிடத் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை உறுதி செய்வதற்கு வேறு புள்ளி விவரம் தேவையில்லை.

வேலை வாய்ப்பு அலுவலகம்
கடந்த ஜூலை 31 நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டுக் காத்திருப்போர் 66.31 லட்சம் பேர். இதில் பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

ஏமாற்று வேலை
தமிழகத்தில் நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை மூடிமறைத்து விட்டு, இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை, நாளேடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் வெளியிடுவதைவிட ஏமாற்று வேலை வேறு என்ன இருக்க முடியும் ? தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நிர்வாகத் திறமை
எனவே, தொழில் வளர்ச்சி குன்றி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதை எதிர்கொள்வதற்கு உரிய நிர்வாகத் திறமையோ, தொலைநோக்குப் பார்வையோ, தொழில் வளர்ச்சிக்கான அணுகுமுறையோ இல்லாத எடப்பாடி ஆட்சியை வருகிற சட்டமன்றத் தேர்தலில் அகற்றுவதன் மூலமே, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications