காங்கிரஸ் போராட்டங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை! ஷிப்ட் முறையில் இன்சார்ஜ்கள்! பலே திட்டம்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களை கண்காணிக்க சத்தியமூர்த்தி பவனில் கட்டுப்பாட்டு அறை அமைத்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.
காலை முதல் மதியம், மதியம் முதல் மாலை என இரண்டு ஷிப்ட்களில் இதற்காக நிர்வாகிகளை பணியமர்த்தும் பலே திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் போராட்டம் நடத்தாமல் எந்த மாவட்ட நிர்வாகியும் டிமிக்கி கொடுக்க முடியாது என்பது கே.எஸ்.அழகிரியின் கணக்காக உள்ளது.

ராகுல்காந்தி
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருப்பது நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

கண்காணிக்கு ஸ்பெஷல் டீம்
இந்த போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும், போராட்ட விவரங்களை சேகரிக்கவும் சத்தியமூர்த்தி பவனில் கட்டுப்பாட்டு அறை அமைத்திருக்கிறார் கே.எஸ். அழகிரி. மேலும், அதோடு மட்டுமல்ல காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்களிலும் இன்சார்ஜ்களை பணியமர்த்தும் பலே திட்டத்தையும் அழகிரி கையில் வைத்திருக்கிறார்.

முதல்முறையாக
தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. சொந்தக் கட்சியினர் போராட்டங்களை முறையாக நடத்துகிறார்களா என்பதை கண்காணிக்க ஸ்பெஷல் டீம் அமைப்பதெல்லாம் இதுவரை எங்கும் கேட்டிராத நிகழ்வாக உள்ளது. இதனிடையே சுமதி அன்பரசு, செந்தமிழ் அரசு, அகரம் கோபி, அஷன் ஷேக், விஜய் சேகர், ரஞ்சித்குமார் என 20 பேர் கொண்ட குழுவை இதற்காக களமிறக்கியுள்ளார்.

ஏமாற்ற முடியாது
போராட்டங்களை கண்காணிக்க சத்தியமூர்த்தி பவனில் கட்டுப்பாட்டு அறை அமைத்திருப்பதன் மூலம் யாரும் போராட்டம் நடத்தாமலே நடத்தியதாக டிமிக்கி கொடுக்க முடியாது என்பது கே.எஸ்.அழகிரியின் கணக்காக உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications