ஒரு பெண்ணாக ரத்தம் கொதிக்கிறது.. அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டும்: எம்பி. ஜோதிமணி காட்டம்
சென்னை; தமிழக பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
பாஜக கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கேடி ராகவனுக்கு எதிராக இணையத்தில் வெளியான பாலியல் ரீதியான வீடியோ பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதன் ரவிசந்திரன் என்ற முன்னாள் பாஜக நிர்வாகி வெளியிட்ட இந்த வீடியோ காரணமாக தமிழ்நாடு பாஜக அதிர்ச்சியில் உள்ளது. இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பாக மாநில செயலாளர் மலர்க்கொடி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேடி ராகவனும் பதவி விலகிவிட்டார். அதேபோல் மதனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேடி ராகவன் வீடியோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசியதாக கூறி மதன் ரவிச்சந்திரன் இன்று வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

சர்ச்சை
அண்ணாமலைக்கும் தனக்கும் நடந்த உரையாடல் என்று கூறி மதன் ரவிசந்திரன் இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். அண்ணாமலைக்கு எதிரான இந்த வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் தங்கள் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டுவந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்.

எது தடுக்கிறது
பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க முடியாமல் தடுப்பது எது? பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுப்பது எது? சொந்த கட்சியிலுள்ள பெண்களிடமே பாஜக தலைவர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார்கள், அதை அந்த கட்சியின் தலைவர் சிறிதும் வெட்கமும்,மனசாட்சியும் இல்லாமல் ஆதரிக்கிறார்

கண்ணியக்குறைவான செய்திகள்
இன்னும் பல கண்ணியக்குறைவான செய்திகள் தமக்குத் தெரியும் என்கிறார். ஒன்றிய இணைஅமைச்சர் திரு. முருகன் தொடர்பாகவும் ஒரு பாலியல் விடியோ இருப்பதாக மதன் சொல்லும் போது திரு. அண்ணாமலை அதை மறுக்கவில்லை ஆக அதுவும் அவருக்கு தெரிந்துதான் இருக்கிறது ஒரு கட்டத்தில் மிக மோசமாகப் பேரம் பேசுகிறார்.

ரத்தம் கொதிக்கிறது
இன்னும் ஒரு படி மேலே போய் கட்சியில் இல்லாத சாதாரண பெண்களிடம் பாஜக தலைவர்கள் முறைகேடாக நடந்துகொண்டிருந்தால் கையில், காலில் விழுந்தாவது பாஜக தலைவர்களை காப்பாற்ற இந்த விடியோவை வெளியிட வேண்டாம் என்பேன் என்கிறார். திரு.அண்ணாமலையைப் பொறுத்தவரை சாதாரணப் பெண்கள் பாஜக தலைவர்களின் காம இச்சைக்குப் பலியாகவேண்டியவர்கள்! அப்படித்தானே?அவர்களைப் பற்றி திரு.அண்ணாமலைக்கு எந்த அக்கறையும் கிடையாது. இதைக் கேட்கும்போது ஒரு பெண்ணாக ரத்தம் கொதிக்கிறது.

பெண்கள் விஷயம்
இவர் தான் தேசம் காப்பவர்! தமிழகத்துப் பெண்கள் தேசம் இல்லையா? எங்களுக்கு கண்ணியமும்,கௌரவமும் இல்லையா? அப்படியென்றால் சாதாரண பெண்களுக்கு இந்த பாஜக தலைவர்களிடமிருந்து என்ன பாதுகாப்பு இருக்கமுடியும்?இப்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்குள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலம் ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரம் அல்ல. பெண்களின் கௌரவம், கண்ணியம், பாதுகாப்போடு தொடர்புடையது.

கடமை
எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் நமது சகோதரிகளே. அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது மற்றும் தமிழக அரசின் கடமை. ஆனால் பாஜகவின் மாநில தலைவர் திரு.அண்ணாமலை சொந்த கட்சியில் உள்ள பெண்களின் பாதுகாப்பையும்,கண்ணியத்தையும் உறுதிசெய்ய முடியாதவர், சாதாரண பெண்களை கிள்ளுக்கீரையாக நினைப்பவர், பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை கண்டும் காணாமல் கடந்து போகிறவர்.

ஏமாற்றுகிறார்
பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக நிற்பவர். இவர்தான் தேசம், தெய்வீகம் என்றெல்லாம் பேசி ஊரை ஏமாற்றிக்கொண்டிருப்பவர். ஆகவே திரு அண்ணாமலை உடனடியாக தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும். தமிழகத்துப் பெண்களை அவமதித்ததற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும், என்று ஜோதிமணி எம்பி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications