இதுதான் பாஜகவின் மனநிலை.. வீடியோ, ஆடியோ பற்றி தலைமை ஏன் வாய் திறக்க மறுக்கிறது: ஜோதிமணி பாய்ச்சல்
சென்னை: இணையத்தில் வெளியாகி சர்ச்சையான வீடியோ, ஆடியோ பற்றி பாஜக தலைமை ஏன் வாய் திறக்க மறுக்கிறது? என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கேடி ராகவனுக்கு எதிராக பாலியல் ரீதியான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மதன் ரவிசந்திரன் என்ற முன்னாள் பாஜக நிர்வாகி இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து மதன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இன்னொரு ஆடியோவை மதன் வெளியிட்டு இருந்தார். கேடி ராகவன் வீடியோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் தான் முன்பே பேசியதாக கூறி மதன் ஆடியோ ரெக்கார்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் இதில் மதனிடம் பேசுவது அண்ணாமலைதானா என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஜோதிமணி
இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து முன்பு கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் தங்கள் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டுவந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார். தமிழக பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும், என்று ஜோதிமணி குறிப்பிட்டு இருந்தார்.

போராட்டம்
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பாஜக அலுவலகமான கமலாலயம் முன்பு ஜோதிமணி போராட்டம் நடத்தினார். பாஜகவில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கூறி கமலாலயம் முன்பு ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் போராட்டம் செய்தனர். ஜோதிமணி எம்பி, வழக்கறிஞர் சுதா உள்பட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த போராட்டத்தின் பொது அப்புறப்படுத்தப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.
முதலில் பாஜக ராகவன்பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக வந்த வீடியோ.அடுத்து பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை பேசியதாக வந்துள்ள ஆடியோ. இரண்டுமே தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.இதுதான் பாஜகவின் மனநிலை என்றால் சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?
— Jothimani (@jothims) August 29, 2021
(1/2) pic.twitter.com/pgrvfuHiZw
கேள்வி
இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஜோதிமணி மீண்டும் ட்வீட் செய்துள்ளார். அண்ணாமலை பேசியதாக வைரலாகி வந்த ஆடியோவை வெளியிட்டு ஜோதிமணி ட்வீட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். ஜோதிமணி தனது ட்வீட்டில், முதலில் பாஜக ராகவன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக வந்த வீடியோ.அடுத்து பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை பேசியதாக வந்துள்ள ஆடியோ.

தமிழ்நாடு
இரண்டுமே தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. இதுதான் பாஜகவின் மனநிலை என்றால் சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? ஏன் இந்த வீடியோ,ஆடியோ பற்றி பாஜக தலைமை வாய் திறக்க மறுக்கிறது?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications