இப்படி எல்லாம் ட்விஸ்ட் பண்ணலாமா? காயத்திரி ரகுராம் வெளியிட்ட காட்டமான வீடியோ
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதாக வெளியாகி உள்ள ஆடியோவில் இருக்கும் விஷயங்களை சிலர் தவறாக திசை திருப்புகிறார்கள் என்று காயத்திரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
பாஜக கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கேடி ராகவனுக்கு எதிராக பாலியல் ரீதியான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதன் ரவிசந்திரன் என்ற முன்னாள் பாஜக நிர்வாகி வெளியிட்ட இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதன் உடனடியாக பாஜகவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இன்னொரு வீடியோவை மதன் வெளியிட்டு இருந்தார். கே. டி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து அண்ணாமலையிடம் மதன் விவாதிப்பது போல இதில் ஆடியோ உரையாடல்கள் அமைந்து இருந்தன. அண்ணாமலையை குற்றஞ்சாட்டும் வகையில் மதன் இந்த உரையாடலை வெளியிட்டு இருந்தார்.

காயத்திரி ரகுராம்
ஆனால் இதில் பேசுவது அண்ணாமலை தானா என்று உறுதி செய்யப்படவில்லை. இந்த உரையாடல் பெரிய சர்ச்சையான நிலையில் தற்போது பாஜக காயத்திரி ரகுராம் அண்ணாமலைக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். காயத்திரி ரகுராம் ட்வீட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களுடைய பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை பெண்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுத்துதான் நடந்து இருக்கிறார். கட்சியில் இருக்கும் சக பெண்களுக்கு மரியாதை கொடுத்து சொந்த சகோதரி போலத்தான் பார்த்து இருக்கிறார்.

வீடியோ
வேறு எதுவுமே கிடையாது. அவர் இதுவரை என்னை தொடங்கி எல்லோரையும் சிஸ்டர், அக்கா என்றுதான் பேசி இருக்கிறார். அவர் அவ்வளவு பணிவானவர். அவரை பற்றி ஆடியோ கிளிப் வெளியாகி உள்ளது. நீங்களே பார்த்து இருப்பீர்கள், எப்படி விஷயத்தை தவறாக டிவிஸ்ட் செய்கிறார்கள் என்று.
|
நோக்கம்
அவரின் ஒரே நோக்கம் நாட்டிற்கு உழைக்க வேண்டும் என்பதுதான். பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் அவரின் நோக்கம். அவர் எப்போதும் பெண்களை பாதுகாக்க வேண்டும். அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று நினைப்பவர். அவருக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன், அவரை நான் சப்போர்ட் செய்கிறேன், என்று காயத்திரி ரகுராம் தனது ட்வீட் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சப்போர்ட்
இதை தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவினர் தற்போது அண்ணாமலைக்கு ஆதரவாக #IStandwithAnnamalai என்று டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். அவர் தமிழ்நாடு பாஜக தலைவராக தொடர வேண்டும். அண்ணாமலை செய்ததில் தவறு இல்லை. வீடியோ வெளியிட்ட மதன் ரவிசந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
-
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications