கே.டி. ராகவன் வீடியோ.. அண்ணாமலை ஆடியோ.. கனத்த மவுனம்.. தமிழக பாஜகவுக்குள் என்னதான் நடக்கிறது
கேடி ராகவன் புகாருக்கு, பாஜக முற்றுப்புள்ளி வைக்க தயங்குவது ஏன்?
சென்னை: கேடி ராகவன் வீடியோ, மற்றும் அண்ணாமலை ஆடியோ, போன்ற சர்ச்சைகளுக்கு தமிழக பாஜக இதுவரை முற்றுப்புள்ளி வைக்க தயங்குவது ஏன்? கட்சிக்குள் அப்படி என்னதான் நடக்கிறது? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவை மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட விவகாரம் தற்போது வரை பரபரப்பை குறைக்காமல் உள்ளது..
அந்த வீடியோவில் மதன் ரவிச்சந்திரன், வெண்பா இருவரும் ராகவன் குறித்த குற்றச்சாட்டை பொதுவெளியிலேயே முன்வைத்திருந்தனர்.

பதவி
ஆனாலும் மதன் ரவிச்சந்திரன், வெண்பா இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் அறிக்கை வெளியானது.. அதற்கு முன்பேயே, அதாவது வீடியோ வெளியானதுமே ராகவன் தன்னுடைய பதவியை ராஜினாமாவும் செய்துவிட்டார்.

ராகவன்
இதற்கு பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2 அறிக்கைகளை வெளியிட்டார்.. ஆனால் அந்த 2 அறிக்கைகளுமே வேறு வேறு வடிவத்தில் இருந்தன.. பிறகு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மதன், மறுபடியும் ஒரு வீடியோ வெளியிட்டு, அண்ணாமலை குரல் என்று சொல்லி ஒரு ஆடியோ வெளியிட்டார். இறுதியில், மதன் வெளியிட்ட கேடி ராகவன் தொடர்பான வீடியோவின் உண்மைதன்மை குறித்து அறிய மலர்க்கொடி என்பவர் தலைமையில் ஒரு விசாரணை குழுவை அண்ணாமலையே நியமித்துள்ளார்.

குழு
இதுதான் இதுவரை நடந்த சம்பவங்களின் சாராம்சம்.. ஆனால், அதற்கு பிறகு ராகவன் வீடியோ தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. ஒரு குழுவை நியமித்து, தமிழக பாஜக ஒதுங்கி கொண்டுள்ளது.. இந்த குழு எந்த அளவுக்கு இது தொடர்பாக ஆராயும் என்று தெரியவில்லை.. காரணம், திருப்பூரை சேர்ந்த மலர்க்கொடி என்பவர் பாஜக மகளிர் அணியில் பொறுப்பில் உள்ளார்.. அவ்வளவுதான்..!

சீனியர்
ஆனால், ராகவனோ, கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைவிட பவர்புல் பொறுப்பை வகித்தவர்.. கட்சியில் சீனியர்.. டெல்லி தலைமையுடன் நேரடியாகவே போனை போட்டு பேசும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்.. இப்போது அவர் ராஜினாமா செய்துவிட்டாலும்கூட, அவருக்கு கட்சியில் தனி மவுசு இருக்கும்.. அப்படி இருக்கும்போது, மலர்க்கொடி குழுவினரின் விசாரணை எந்த அளவுக்கு இதில் உண்மைத்தன்மையை கொண்டு வரும் என்பது தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
Recommended Video

அண்ணாமலை
மற்றொருபக்கம், அண்ணாமலை இந்த விஷயத்தில் இரட்டிப்பு தன்மையுடன் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.. ஒரு கட்சியின் மாநில தலைவர் அப்படித்தான் நடந்து கொள்ள முடியும் என்றும், சில விஷயங்களை ஓபனாக சொல்ல முடியாது என்பதால், மேம்போக்காகவே அண்ணாமலை நடந்து கொள்வதாகவும் கருதப்படுகிறது.. அதற்காக மதனிடம் இந்த அளவுக்கு இறங்கி போய் ஒரு மாநில தலைவர் பேச வேண்டுமா? கட்சி உறுப்பினர்களை பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன?

மதன்
மதன் என்பவர் சாதாரண நபர்.. வெண்பா என்பவர் யாரென்றே தெரியாது... ஒரு மாநில தலைவர் அவர்களிடம் தேவையில்லாததையும் பேசி சிக்குகிறார்.. ஆனால், அவர்கள் துணிச்சலாக வெளியிடுகிறார்கள்... ஆனால், தமிழக பாஜக அமைதி காக்கிறது.. சுமந்த் சி ராமன் போன்றோர் சட்ட நடவடிக்கை எடுக்கச்சொல்கிறார்கள். ஆனாலும் பாஜக தலைமை வாய்மூடி மவுனியாகவே இருக்கிறது.

பதில்
இந்த வீடியோ தொடர்பாக தெளிவான பதில் இல்லை என்பது போல் அண்ணாமலை ட்வீட் போடுகிறார்.. ஒரு தேசிய கட்சி, இந்த அளவுக்கு அலட்சியமாக கட்சியின் இமேஜை பாதிக்கும் வீடியோ விவகாரத்தை கையாள்வது பலவித சந்தேகங்களை மக்களிடம் கிளப்புகிறது..

ட்விட்டர்
கட்டுப்பாடான கட்சி என அதன் தலைவர்கள் கூறிக்கொள்வதும், பிரச்சினை வந்தபோது ஒருவரும் கருத்து தெரிவிக்காமல் மவுனமாவதும், ட்விட்டரிலே காலத்தை கழிக்கும் குஷ்பு போன்றோர் இந்த விவகாரத்தில் மவுனமாக இருப்பதும், யாரோ ஒருவர் செய்து ஒரு டிஷ்சை பாராட்டி எனக்கும் கிடைக்குமா என்று கேட்கும் அளவுக்கு இந்த விவகாரத்தில் பட்டும் படாமலும் இருக்கிறார். இவை அனைத்தும் ஒரு விஷயத்தை கேள்வியாக அனைவர் முன் வைக்கிறது. பாஜகவின் கனத்த மவுனத்தின் பின் உள்ள சங்கதி என்ன என்பதே அது.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி?












Click it and Unblock the Notifications