ஆசை.. ஆசையா பாஜகவுக்கு போனாரே.. இப்ப பாருங்க இப்படி ஆகிடுச்சு.. முகத்தை தொங்க போட்ட கு.க.செ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் இருந்து ஆசை ஆசையாக பாஜகவிற்கு சென்ற கு.க செல்வம் தற்போது மிக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.. ஆனால் பாவம் அவருக்குதான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் கு.க செல்வம். இவரின் தொகுதியான ஆயிரம் விளக்கில் உதயநிதி போட்டியிட போகிறார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வந்தன.

ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏதான் கு.க செல்வம். இந்த தொகுதி உதயநிதிக்கு சென்று விடுமோ என்ற விரக்தியில் இருந்தவர் அப்படியே பாஜக பக்கம் சாய்ந்தார்.

டெல்லி

டெல்லி

அப்படியே டெல்லிக்கு சென்று ஜே.பி நட்டாவை சந்தித்து கு.க செல்வம் பாஜகவில் இணைந்துவிட்டார். இவருக்கு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாஜகவில் இணைந்தார். அதேபோல் அதிமுக கூட்டணியிலும் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜகவிற்கு வழங்கப்பட்டது.

ஆனால்

ஆனால்

ஆனால் பாஜகவோ கு.க செல்வத்திற்கு இந்த தொகுதியை ஒதுக்காமல் குஷ்புவிற்கு இதே தொகுதியை கொடுத்தது. பாஜகவின் தேசிய தலைவர்கள் சிலர் கொடுத்த அழுத்தத்தால் இவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. மாறாக குஷ்புவிற்கு இடம் வழங்கப்பட்டது.

 பிரச்சாரம்

பிரச்சாரம்

இந்த நிலையில் தன்னுடைய ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே குஷ்புவிற்காக கு.க செல்வம் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். கட்சியின் முடிவிற்கு கட்டுப்பட்டு குஷ்புவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் இவரின் முகத்தில் கொஞ்சம் கூட உற்சாகமே இல்லாமல் பெரிய ஆரவாரம் இன்றி பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்.

தொங்க போட்டார்

தொங்க போட்டார்

குஷ்பு செல்லும் இடங்களில் எல்லாம் அவருடன் சென்று இவர் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் இவரிடம் பெரிய அளவில் உற்சாகம் இல்லை. இருந்ததும் போய் விட்டதே என்பது போல வருத்தத்துடன் இவர் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்.

 தப்பான முடிவு

தப்பான முடிவு

இவருக்கு மத்திய அரசின் நிறுவனம் ஒன்றில் பெரிய பொறுப்பு தருவதாக பாஜக உறுதி அளித்துள்ளதாம். ஆனாலும் அதெல்லாம் எம்எல்ஏ போல வராது.. தேவையின்றி தப்பான முடிவு எடுத்துவிட்டோமோ என்று இவர் குழப்பத்தில் இருக்கிறாராம். இருந்தாலும் பாஜக தலைமை மீது நம்பிக்கை வைத்து இவர் தேர்தலில் களமிறங்கி உள்ளார் என்கிறார்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+