மேகதாது அணை கட்ட தமிழகம் ஒத்துழைக்க வேண்டும் - குமாரசாமி
சென்னை: மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மேகதாது அணை கட்ட தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை. அதை இந்த ஊடக சந்திப்பு மூலம் கோரிக்கையாக வைக்கிறேன்.

நாம் இந்தியா பாகிஸ்தான் கிடையாது. சகோதர சகோதரிகள். உபரி நீரை சேமித்து வைக்கவே அணை கட்ட விரும்புகிறோம். இதை வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டோம். விவசாயத்துக்கு இந்த தண்ணீரைப் பயன்படுத்த மாட்டோம்.
இது சாதாரண நீர்த்தேக்கம்தான். தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை கேட்கும்போதெல்லாம் திறந்து விடுவோம். நல்ல மழை இருக்கும்போது நிறைய தண்ணீர் வருகிறது. அதை தமிழகத்திற்குத் திறந்து விடுகிறோம். ஆனால் தமிழகத்தில் போதிய அணைக்கட்டுகள் இல்லை. இதனால் தண்ணீர் வீணாக கடலில் போய்ச் சேருகிறது. அதைத் தடுத்து சேமிக்கவே இந்த அணை கட்ட திட்டமிட்டுள்ளோம்.
இதை தமிழகம் கெளரவப் பிரச்சினையாக பார்க்க வேண்டாம். சகோதர உணர்வுடன் கேட்கிறேன், ஒத்துழைப்பு தாருங்கள். கடந்த 30-40 வருடமாக இந்த கோரிக்கையை விடுத்து வருகிறோம். இன்று எழுந்த பிரச்சினை அல்ல இது, 125 வருடப் பிரச்சினை காவிரிப் பிரச்சினை என்றார் குமாரசாமி.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications