குன்றத்தூர் அபிராமியை ஞாபகமிருக்கா? கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற வழக்கில் தீர்ப்பு எப்போது?
சென்னை: சென்னை குன்றத்தூர் அபிராமி, கள்ளக்காதலுக்காக தான் பெற்ற இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவத்தில் புழல் சிறையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு எப்போது தீர்ப்பு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் அபிராமி. 30 வயதான இவர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தார். இவருடைய கணவர் விஜய். தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு அஜய், கார்னிகா ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர்.

அபிராமிக்கு தன் பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சென்று வந்தது தெரியவந்தது. சில நேரம் கடைக்கு போன் செய்து ஆர்டர் செய்தும் பிரியாணியை சாப்பிட்டு வந்தார்.
அந்த வகையில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரத்துடன், அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர் ஆர்டர் செய்த போதெல்லாம் சுந்தரம்தான் பிரியாணியை கொண்டு வந்து கொடுப்பாராம். அப்போது இவர்களுக்கான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் கணவருக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த விவகாரம் அரசல் புரசலாக அபிராமியின் கணவர் விஜய்க்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. கணவரின் கெடுபிடிகளால் சுந்தரத்தை பார்க்க முடியாமலும் அவருடன் போனில் பேச முடியாமலும் அபிராமி தவித்து வந்ததாக தெரிகிறது.
கணவரா, சுந்தரமா என்ற கேள்வி வந்த போது அபிராமிக்கு சுந்தரம்தான் முக்கியம் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்து சுந்தரத்துடன் வாழலாம் என அபிராமி முடிவெடுத்தார். சுந்தரத்துடன் செல்ல தடையாக இருப்பது கணவர் என்றாலும் அவரை எப்படியாவது உதறி தள்ளிவிடலாம். ஆனால் குழந்தைகள் இருக்கிறார்களே, அவர்களை காட்டி சென்டிமென்ட்டாக மடக்கி, சுந்தரத்தை பிரித்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அபிராமிக்கு ஏற்பட்டது.
இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு சுந்தரத்திடம் கூறி தூக்க மாத்திரை வாங்கி வர சொன்னார். அவர் வாங்கிக் கொண்டு வந்த தூக்க மாத்திரையை அபிராமி, இரவு பாலில் கலக்கி கொடுத்துவிட்டு குழந்தைகளின் கழுத்தையும் நெரித்து கொன்றதாக தெரிகிறது. இதையடுத்து மறுநாள் கணவர் வேலைக்கு செல்லும் போது விழித்துக் கொள்ளும் குழந்தைகள் எழாததால் கணவர், அவர்களை போய் எழுப்ப சென்றார். உடனே "அவர்களை எழுப்பினால் நாம் சிக்கிவிடுவோம்" என கருதிய அபிராமி, தூங்கும் குழந்தைகளை ஏன் எழுப்பறீங்க என கேட்டு அவரை எப்படியோ அலுவலகத்திற்கு செல்ல வைத்துவிட்டார்.
பிறகு தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு, குழந்தைகள் பிணமாக கிடக்கிறார்களே என்ற ஈவு, இரக்கம் ஏதும் இன்றி, இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். பின்னர் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த கணவருக்கு அதிர்ச்சி! இரு குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி இருந்ததை அடுத்து குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்த போலீஸார் இரு குழந்தைகளின் சடலத்தையும் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கை வந்த போதுதான் அபிராமி, குழந்தைகளை கொன்ற விவகாரம் தெரியவந்தது. இந்த நிலையில் அபிராமியை தேடி வந்த நிலையில் கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனத்தை விட வந்திருந்தார். அவரை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் அபிராமியின் உறவினர்கள் உள்பட 22 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications