Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் முக்கியமான துறையான போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் சிவசங்கர். மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டும் இவருக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரின் ஆதரவு இருந்தும் வெற்றி பெருவாரா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து 133 இடங்களிலும், கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 159 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. வரும் தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகிறது திமுக தலைமை. அதற்காக திமுக தலைமை வட்டம், கிளை, ஒன்றியம், நகரம், மாவட்டம் என பம்பரமாய் சுற்றி சுழன்று தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

tamil nadu assembly elections 2026 dmk

தொகுதிகளை தக்கவைக்க வேண்டும்

முக்கியமான கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகளை தக்கவைக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை அதிக முனைப்பு காட்டி வருகிறது. எனவே, சிட்டிங் எம்எல்ஏக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதியில் செய்திருக்கும் பணிகள், தொகுதி மக்களிடையே எம்எல்ஏக்களுக்கு இருக்கும் நன்மதிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மறு வாய்ப்பு வழங்க திமுக முடிவு செய்துள்ளது என்கிறது திமுக வட்டாரம்.

பல சிட்டிங் எம்எல்ஏக்கள் மீண்டும் இந்த தேர்தலில் வாய்ப்பு பெற்று விட வேண்டும் என விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு சிட்டிங் எம்எல்ஏவும், அமைச்சருமான சிவசங்கர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கே வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. ஆனால் அவரது வெற்றி எளிதாகுமா என்பது தான் கேள்விக்குறி. இவருக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரின் ஆதரவு இருந்தும் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

குன்னம் தொகுதியின் வெற்றி தோல்வி

குன்னம் தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவிற்கு இங்கு வன்னியர் சமுதாய ஓட்டுகள் அதிகம். அதே சமூகத்தை சேர்ந்த சிவசங்கருக்கு தன் சமுதாய ஓட்டுகள் அப்படியே கிடைக்கும் என கணக்கு போடுகிறார் சிவசங்கர். ஆனால் அதற்கு சாத்தியம் இருக்குமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் ஆதரவு சிவசங்கருக்கு உள்ளது. அந்த ஆதரவு மற்றும் ராசாவின் செல்வாக்கால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என கணக்கு போடுகிறார் சிவசங்கர்.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் பக்கமே ராசா வரவில்லையாம். அதனால் அவரது செல்வாக்கு டேமேஜ் ஆகியிருப்பதாகவும், ஆ.ராசாவால் சிவசங்கருக்கு எந்த பிரயோஜனமும் இருக்கப்போவதில்லை என்பதும் தான் கள எதார்த்தம் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

வன்னியர்களுக்கு அடுத்ததாக சிவசங்கருக்கு விசிக ஓட்டுகள் ஓரளவிற்கு கை கொடுக்கும் என்பதில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார் சிவசங்கர். ஆனாலும் தனது வெற்றியை பதிவு செய்ய சிவசங்கர் கொஞ்சம் போராடத் தான் வேண்டும் என்கிறார்கள் குன்னம் தொகுதியை நன்கறிந்தவர்கள்.

-சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+