ரஜினியுடன் காங்கிரஸை கூட்டணி சேர சொல்கிறாரா குஷ்பூ...!
சென்னை: ரஜினிகாந்த் தொடங்கும் அரசியல் கட்சியுடன் காங்கிரஸை கூட்டணி சேருமாறு அக்கட்சியின் தலைமைக்கு குஷ்பூ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக -காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக செல்லும் நிலையில் குஷ்பு இப்படி கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுவது இரண்டு கட்சி தலைவர்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ரஜினிகாந்த் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்டே எந்த கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டணி அமைக்கமாட்டார் என அடித்துக் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

யாருடன் கூட்டணி
ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்ட நிலையில் அவருடன் இணைந்துகொள்ள பல அரசியல் கட்சிகளும் இப்போதே போட்டி போட்டு வருகின்றன. இதனை உணர்ந்த ரஜினி யாருக்கும் பிடி கொடுக்காமல் குறிப்பாக பாஜகவுக்கே தண்ணீர் காட்டி வருகிறார்.

காங்-ரஜினி கூட்டணி
தன் மீது காவி சாயம் பூசும் முயற்சி பலிக்காது என அண்மையில் ரஜினிகாந்த் பேட்டியளித்தது காங்கிரஸ் முகாமை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ரஜினி தொடங்கும் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி சேர வேண்டும் என தலைமைக்கு கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மறுப்பு
திமுக-காங்கிரஸ் கூட்டணி மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற செய்திகள் பரப்பப்படுவதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரம் கொதிக்கிறது.

கோரிக்கை
மேலும், தற்போதைய நிலவரப்படி ரஜினிகாந்துக்கு யாருடனும் கூட்டணி சேரும் எண்ணம் இல்லை என்றும், அதன் காரணமாகவே கமலுடன் இணைவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கூட தேர்தலின் போது பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறியதாகவும் ரஜினி ரசிகர் மன்றத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications