சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலையை இழுத்து அசிங்கப்படுத்தினர்.. வீட்டில் கல்விட்டு அடித்தார்கள்... புயலை கிளப்பிய குஷ்பு!

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலினின் ஆட்கள் என் வீட்டில் கல்விட்டு அடித்தார்கள். சேலையை இழுத்து அசிங்கப்படுத்தினர். ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன் என ஆயிரம் விளக்கு பாஜக வேட்பளார் குஷ்பு பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். என்னுடைய வெற்றி ஜெயலலிதாவின் வெற்றி. நீங்கள் செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா என்று ஜெயலலிதா பாணியில் குஷ்பு வாக்கு கேட்டார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் குஷ்பு போட்டியிடுகிறார். திமுக சார்பில் டாக்டர் எழிலன் போட்டிடுகிறார்.திமுகவின் கோட்டை என்று கருதப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பல முறை திமுகவே வென்றுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் முன்னாள் அமைச்சர் வளர்மதி வென்றார். கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட குக செல்வம் வென்றார்.

ஆனால் இந்த முறை குக செல்வம் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அவர் குஷ்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதுதவிர அதிமுகவின் வாக்கு வங்கி மற்றும் கூட்ணி பலம் மூலம் பாஜக வெற்றி பெற முடியும் என்று உறுதியாக நம்புகிறது.

ஆயிரம் விளக்கு

ஆயிரம் விளக்கு

இந்நிலையில் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று
ஆயிரம் விளக்கு தொகுதியில் புஷ்ப நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை குறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

திமுக கோட்டை அல்ல

திமுக கோட்டை அல்ல

நடிகை குஷ்பு பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க இந்த தொகுதியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்றார். இந்த முறை இங்கு நான் வெற்றிபெற்றால் அது மக்களின் வெற்றி. பெண்களின் பயத்தை போக்க நான் சட்டசபைக்கு செல்ல நினைக்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை அல்ல. அதிமுகவின் கோட்டை, பாஜகவின் கோட்டை, கூட்டணி கட்சிகளின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இது திமுகவின் கோட்டை என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் கொளத்தூருக்கு போயிருக்க மாட்டார்.

ஸ்டாலின் ஆட்கள்

ஸ்டாலின் ஆட்கள்

தி.மு.க பேச்சாளர்கள் தொடர்ந்து இழிவாக பேசுகிறார்கள். முதல்வரின் தாயார் இறந்து மூன்று மாதம் ஆகிறது. அவரைப் பற்றி தவறாக பேசியுள்ளார்கள். ஸ்டாலினின் ஆட்கள் வீட்டில் கல்விட்டு அடித்தார்கள். சேலையை இழுத்து அசிங்கப்படுத்தினர். ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன்.

ஜெயலலிதாவின் வெற்றி

ஜெயலலிதாவின் வெற்றி

என்னை கட்சி மாறுகிறேன் என்று சொல்கிறார்கள். ஏன் வேறு யாருமே கட்சி மாறவில்லையா? இலவச வாஷிங் மெஷின் கொடுத்தால் பெண்கள் குண்டாகிவிடுவார்கள் என்று சிலர் பேசுகிறார்கள். நீங்கள் பெண்கள் செய்யும் வேலைகளை ஒரு நாள் செஞ்சு பாருங்க. இலவச வாஷிங் மெஷின் திட்டத்தின் மூலம் பெண்கள் வேலை குறையும், அவர்கள் மூச்சு விட நேரம் கிடைக்கும். என்னுடைய வெற்றி ஜெயலலிதாவின் வெற்றி. நீங்கள் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா" இவ்வாறு குஷ்பு பேசினார்.

English summary
'I faced insults like Jayalalithaa' bjp kushboo election campaign in thousand lights constituency chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X