தமிழகத்தில் பாஜக எத்தனை எம்பி தொகுதிகளில் போட்டி.. நான் போட்டியிடுகிறேனா.. குஷ்பு பரபரப்பு பதில்
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கும் எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலை போல் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் வியூகம் வகுத்து வருகிறது.

இந்த நிலையில் ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் நேற்றைய தினம் விசாகப்பட்டினத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிய பின்னர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்திருந்தார். அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
இந்த நிலையில் காலை கிண்டி ஹோட்டலில் அவர் பாஜக மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதையடுத்து கோவிலம்பாக்கத்தில் உள்ள தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்தார். இந்த கூட்டத்தில் குஷ்பு, எச் ராஜா, நமீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எச் ராஜா பேசுகையில் அன்று அமித்ஷா வரும் போது கருப்பு பலூன் விட்டார்கள். இன்று கரென்ட்டை கட் செய்துள்ளார்கள்.
இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளவருக்கே இந்த நிலை. சாதாரணமாக மின் வெட்டு நடப்பது சகஜம்தான். ஆனால் அமித்ஷா வருகிறார் என தெரிந்தும் மின்வெட்டு நடந்திருப்பது பெரும் கண்டனத்துக்குரியது. தமிழகத்திற்கு அமித்ஷா வருகைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவின் வருகை குறித்து குஷ்பு கூறுகையில், தமிழகத்திற்கு அமித்ஷா வருகை தந்துள்ளது எங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் கேட்கிறாரே. இது வரை இவர் தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்.

மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவற்றையே ஸ்டாலின் செயல்படுத்துகிறார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 5000 கொடுத்துள்ளோம். இதை நாங்கள் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்கவில்லையா என்பதை முதல்வர் சொல்ல வேண்டும். மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அந்த திட்டம் தமிழகத்தில் உள்ள அனைவரையும் போய் சேர வேண்டும்.
ஒரு வேளை அந்த திட்டம் போய் சேரவில்லை என்றால் ஏன் சேரவில்லை என்பதை முதல்வர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். அமித்ஷாவின் வருகை தேர்தலில் எதிரொலிக்கும். கூட்டணி கட்சியில் இருந்தாலும் தங்கள் கட்சியை வளர்க்க தனியே சில வியூகங்களை வகுக்கத்தான் வேண்டும். அதைதான் இன்று செய்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. நான் போட்டியிடுகிறேனா இல்லையா என்பதை எல்லாம் கட்சித் தலைமை சொல்லும். நான் சொல்ல முடியாது. அது போல் இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications