மிஸ்டர் பிரதமர்.. பச்சோந்தியைவிட வேகமாக நிறம் மாறுகிறீர்களே.. வெட்கக்கேடு.. குஷ்பு ட்வீட்

பிரதமர் மோடியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் அவர்களே.. பச்சோந்தியைவிட வேகமாக நிறம் மாறுகிறீர்களே, வெட்கக்கேடு" என பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.

வழக்கமாக எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருபவர் பிரதமர் மோடி. குறிப்பாக பிரச்சாரத்தின்போது நேரு குடும்பத்தை அளவுக்கு அதிகமாகவே களங்கம் கற்பித்து ஓட்டு கேட்டு வந்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில், ராஜீவ் காந்தி நம்பர் ஒன் ஊழல்வாதியாக மறைந்தார் என்று மோடி பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Kushboo slams PM Modi who paid homage to former PM Rajiv Gandhi on his death anniversary

இந்நிலையில், நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் வீர் பூமியில் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடியும் ராஜீவ் நினைவு நாளுக்கு அஞ்சலி தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார்.

இதனை குஷ்பு ட்வீட் போட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார். "இது என்ன கேலிக்கூத்து.. பிரதமர் அவர்களே.. நீங்கள் ராஜீவை அசிங்கப்படுத்தினீர்கள், கேவலமாக விமர்சித்தீர்கள். இப்போது அவருக்கு அஞ்சலி செலுத்துகிறீர்களே! பச்சோந்தியைவிட வேகமாக நிறம் மாறுகிறீர்கள் பிரதமரே. வெட்கக்கேடு" என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+