கூகுள்ல தேடுங்க.. காங்கிரஸ் எங்கன்னு தெரியும்.. நெட்டிசன்களால் குஷ்பு கொதிப்பு
Recommended Video
சென்னை: கூகுளில் தேடி பாருங்கள் காங்கிரஸ் கட்சி எங்கிருக்கும் என்பது தெரியும் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தால் கொதித்து போன காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு டுவிட்டரில் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 66 தொகுதியில் 63 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. மொத்தமே 5 சதவீதம் வாக்குகளை தான் காங்கிரஸ் டெல்லியில் பெற்றுள்ளது. ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் 15 வருடங்கள் டெல்லியை தொடர்ந்து ஆண்டது.
ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சிக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கரைந்த காங்கிரஸ் இப்போது டெல்லியில் சுத்தமாக காணாமல் போய்விட்டதாக தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறையைப்போல் இந்த முறையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

பிரணாப் மகள் கோபம்
இந்த சூழலில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த ஆதரவை வெகுவாக பாராட்டி ப சிதம்பரம் நேற்று டுவிட் போட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.`டெல்லியில் ஏன் காங்கிரஸ் தோற்றது என்று தோல்வி குறித்துப் பேசாமல் ஆம் ஆத்மியின் வெற்றியை காங்கிரஸார் கொண்டாடுவது ஏன்?' என பிரணாப் முகர்ஜி-யின் மகள் கடுமையாகச் சாடினார்.
|
சண்டை
இதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாம் போகும் பாதை சரியா என்றால் இல்லையென நான் சொல்வேன். கட்சியில் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும், ஆனால், மக்கள் வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடியின் அராஜகக் கும்பலை நிராகரித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி" என்றார். இவரது இந்த கருத்தால் கடுப்பாகிப்போன அவரது ட்விட்டர் பாலோயர்கள் அவருடன் சண்டை போட்டு வருகிறார்கள். இதனால் கருத்து மோதல்கள் அதிகரித்து வருகிறது.
|
குஷ்பு கொதிப்பு
இந்த நிலையில் குஷ்புவை ட்விட்டரில் பின்தொடரும் பாலோயர் ஒருவர், `கூகுளில் தேடிப் பாருங்கள் காங்கிரஸ் எங்கிருக்கிறது என தெரியவரும்' என்று நக்கல் அடித்துள்ளார். இதை கண்டு கொதித்து போன குஷ்பு, `உங்களது மூளையை ப்ரஷ் பண்ணிக் கழுவிட்டு வாருங்கள். மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கெல்லாம் போய்ப்பாருங்கள். அங்கு காங்கிரஸ் யாருன்னு சொல்வாங்க'' என பதிலடி கொடுத்துள்ளார்.
|
அமேசானில் வாங்குவேன்
இதற்க பதிலடி கொடுத்துள்ள அந்த பாலோயர் அக்கா, நான் அமேசானில் , ப்ளிப்கார்டில் எனக்கு மூளையை வாங்கிடுவேன். ஆனால் அங்கெல்லாம் காங்கிரஸ்க்கு ஓட்டு கிடைக்காது என்று கூறியுள்ளார். இதற்கு மீண்டும் பதில் அளித்துள்ள குஷ்பு, நீங்கள் மூளை இல்லாமல் பிறந்தவர் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். அதை தள்ளுபடி விலையில வாங்க விரும்புறீங்க.. இது உங்களுக்கான நல்ல முயற்சி பதிலடி கொடுத்துள்ளார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications