சாத்தான்குளம் நிகழ்வை ''ஒரு சின்ன இஷ்யூ'' எனக் கூறிய எல்.முருகன்... வீடியோவை பதிவிட்ட உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை,மகன் மரணத்தை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ''ஒரு சின்ன இஷ்யூ'' என தனது பேட்டியின் போது கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

கோவையில் நேற்று முன் தினம் முருகன் அளித்த இந்த பேட்டியின் வீடியோ பதிவை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு அது தொடர்பாக விமர்சித்துள்ளார்.

அதில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை சுட்டுக்கொன்றாலும், சாத்தான்குளத்தில் 2 பேரை அடித்தே கொன்றாலும் அது பாஜகவுக்கு சின்ன இஷ்யூ தான் என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மனதை உலுக்கிய

மனதை உலுக்கிய

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரது மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கும் வகையில் உள்ளது. அவர்களது மரணத்திற்கு காரணங்களாக வெளிவரும் ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. நாட்டிலேயே முதல்முறையாக அதுவும் 159 ஆண்டுகால இந்திய காவல்துறை சட்டம் வரலாற்றில் முதல்முறையாக ஒரு காவல்நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்கு கீழ் சென்றிருக்கிறது.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், சாத்தான்குளம் விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாகவும், ''ஒரு சின்ன இஷ்யூ''வை எடுத்துக்கொண்டு அதை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வை முருகன் ஒரு சின்ன இஷ்யூ எனக் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. அவரது வீடியோ பதிவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் இது தொடர்பாக சாடியுள்ளார்.

நோட்டாவுக்கு கீழ்

நோட்டாவுக்கு கீழ்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை சுட்டுக்கொன்றாலும், சாத்தான்குளத்தில் 2 பேரை அடித்தே கொன்றாலும் அது பாஜகவுக்கு சின்ன இஷ்யூ தான் என்றும் ஆனால் நாட்டின் மிகப்பெரிய இஷ்யூவே இவர்கள் தான் என்பதை மக்கள் அறிவார்கள் எனவும் பாஜகவை விமர்சித்துள்ளார். மேலும், தலைகீழாகத்தான் குதிப்பேன் என்றாலும் பாஜக நோட்டாவுக்கு கீழே தான் என உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உதயநிதி பதில்

உதயநிதி பதில்

சட்டமன்றத்திற்குள் பாஜக எம்.எல்.ஏ.க்கள் செல்வார்கள் என எல்.முருகன் கூறி வரும் நிலையில், தலைகீழாக நின்றாலும் பாஜக நோட்டாவுக்கு கீழே தான் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதனிடைய சாத்தான்குளம் நிகழ்வை ''ஒரு சின்ன இஷ்யூ'' என முருகன் பேசியதை பெரிய இஷ்யூவாக்க திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+