அமித்ஷா வந்தும் தீராத பிரச்சனை.. குண்டை தூக்கி போட்ட எல்.முருகன்.. குழப்பத்தில் அதிமுகவினர்..!
பாஜக அதிமுக கூட்டணி குறித்து எல் முருகன் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: அமித்ஷா இங்கு வந்து சென்ற பிறகும், கூட்டணி குறித்து எல்.முருகன் பேசிய பேச்சு அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.
யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை அதிமுகவில் எழுந்தது.. பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினரை அமைச்சர்கள் ஆளுக்கொரு பக்கம் சந்தித்து பேசி, அவர்களை சமாதானம் செய்து, இறுதியில் அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.
இதையடுத்து எடப்பாடியார் தான் முதல்வர் வேட்பாளர் என முடிவானது.. இந்த சமயத்தில், அடுத்த பிரச்சனையை பாஜக கிளப்பியது.. கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.. இவரை தொடர்ந்து பொன்.ராதா முதல் எல்.முருகன் வரை இதே கருத்தை வலியுறுத்தினர்.

அமித்ஷா
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடமும் கருத்து கேட்கப்பட்டது.. யார் சொன்னாலும் எடப்பாடியார்தான் முதல்வர் என்று ஸ்டிராங்காக சொல்லிவிட்டார்.. இப்படிப்பட்ட சூழலில்தான் அமித்ஷா இங்கு வந்திருந்தார்.. எப்படியும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேச்சு எழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கூட்டணி
ஆனால் இவர்கள் எல்லாம் லீலா பேலஸ் ஓட்டலில் என்ன பேசினார்கள் என்று இதுவரை நமக்கு தெரியவில்லை என்றாலும் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த பேச்சும் பேசவில்லை என்பது மட்டும் தெளிவானது. அதேசமயம் பாஜக - அதிமுக கூட்டணியும் முடிவானது.. எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பது குறித்து கலந்து பேசி முடிவு சொல்வதாக அதிமுக தரப்பில் சொல்லப்பட்டதாக செய்திகளும் கசிந்தன.

யாத்திரை
இப்படிப்பட்ட சூழலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுகவினருக்கு மறுபடியும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிவர் புயல் காரணமாக பாஜக சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது.. டிசம்பர் 4 -ம் தேதி அறுபடை வீடுகளில் வழிபாடு செய்தபின் டிசம்பர் 5-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு நிகழ்ச்சி நிறைவுபெறும்.

அதிமுக
யாத்திரையை நிறுத்தி விட்டு புயல் மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளேன்.. அதிமுக பாஜக கூட்டணி குறித்தும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும்" என்றார். இதுதான் மறுபடியும் அதிமுகவினர் தலையை சுத்த விட்டுள்ளது.. மறுபடியும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையா? முதல்வர் வேட்பாளரை யார் முடிவு செய்வார்கள் என்ற குழப்பமும் ஏற்பட்டு வருகிறது.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications