2021-ல் தமிழக மந்திரிசபையில் பாஜக இடம்பெறுவது உறுதி... எல்.முருகன் திட்டவட்டம்
சென்னை: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக மந்திரி சபையில் பாஜக இடம்பெறுவது உறுதி என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக சட்டமன்றத்திற்குள் பாஜக எம்.எல்.ஏ.க்களை இரட்டை இலக்கத்தில் அனுப்பி வைக்கும் வரை தனக்கு ஓய்வும் இல்லை உறக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
கூட்டணி விவகாரத்தை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடரும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

எல்.முருகன்
தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டது முதல் அக்கட்சியை பரபரப்பாகவே வைத்து வருகிறார் எல்.முருகன். கந்தசஷ்டி கவசத்தில் தொடங்கி கோயில் திறப்பு வரை கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சாதகமாக பயன்படுத்தி துடிப்பாக செயல்பட்டு வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவோடு தமிழகத்தை சுற்றி வரத் தொடங்கியிருக்கிறார் எல்.முருகன்.

அமைச்சரவையில் பாஜக
இந்நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், வரும் 2021 தேர்தலுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் பாஜக கண்டிப்பாக இடம்பெறும் என்றும், தமிழகத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் எனவும் கூறியிருக்கிறார். இரட்டை இலக்கத்தில் பாஜக உறுப்பினர்கள் தேர்தலில் வெல்வார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ள முருகன் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது எனத் தெரிவித்திருக்கிறார்.

யார் தலைமை?
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் தற்போது என்ன நிலை உள்ளதோ அது தேர்தலின் போதும் தொடரும் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அதிமுக தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்றுக்கொள்வதாக சூசகமாக விடையளித்துள்ளார் எல்.முருகன். அண்மையில் இது தொடர்பாக பேட்டியளித்த பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி பாஜக தலைமையில் தான் கூட்டணி எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக மவுனம்
பாஜக -அதிமுக இடையே கூட்டணி அமைந்தாலும் அமையலாம் அமையாமலும் போகலாம் என அண்மையில் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது. இதனிடையே கூட்டணி விவகாரத்தில் தற்போதைய நிலை தொடரும் என எல்.முருகன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications