La Ganesan Death: மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் உடல் தகனம்.. 42 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை!
சென்னை: நாகாலாந்து மாநில முன்னாள் ஆளுநரும், தமிழக முன்னாள் பாஜக தலைவருமான இல கணேசன் ( La Ganesan Death) நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இல கணேசன் உடல் இன்று சென்னை தியாகராயநகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், தற்போது 42 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
நாகலாந்து மாநில முன்னாள் ஆளுநராக இருந்தவர் இல கணேசன். தமிழக முன்னாள் பாஜக தலைவராகவும் பதவி வகித்த இவர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல. கணேசன், கடந்த மாதம் சென்னை வந்தார்.

தலையில் ரத்தக்கட்டு
சென்னையில் உள்ள மருத்துவமனையில் தங்கி கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இதில் உடல் நிலை சற்று தேறியதை அடுத்து வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது கால் மரத்துப் போனதால் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் இல கணேசனை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கு பிறகு சிகிச்சை முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். இதன் பின்னர் கடந்த 8 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தலைச்சுற்றல் ஏற்பட்டதால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இல கணேசனை சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனையின் போது அவருக்கு தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் தொடர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இல கணேசன் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல், மருத்துவமனையில் இருந்து சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இல கணேசன் மறைவை அறிந்து அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தலைவர்கள் அஞ்சலி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தியாகராயநகரில் உள்ள இல கணேசன் வீட்டுக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று தமிழக முதல்வர் ஸ்டாலினும் இல கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச். ராஜா, வானதி சீனிவாசன் எம்எல்ஏ., மாநில துணை தலைவர் சக்கரவத்தி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
தியாகராயநகர் வெங்கட்நாராயண ரோட்டில் உள்ள கண்ணதாசன் மைதானத்தில் இல கணேசனின் உடல் இன்று காலை 9 மணியளவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் அவரது உடல், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இல.கணேசனின் உடலுக்கு 42 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications