இல.கணேசன் வீட்டு விஷேசம்..மம்தா, ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன்,ரஜினி..ஒன்றிணைந்த தலைவர்கள்
சென்னை: மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் சகோதரரின் 80ஆவது பிறந்த நாள் விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழிசை சவுந்தராஜன், நடிகர் ரஜினிகாந்த் முக்கிய பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனின் சகோதரரின் 80ஆவது பிறந்த நாள் விழா சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்றார். மண்டப வாசலில் செண்டை மேளத்தை ரசித்து கேட்ட அவர், தானும் உற்சாகமாக வாசித்து விட்டு மண்டபத்திற்குள் சென்றார். நடிகர் ரஜினிகாந்த் வழக்கமான ஸ்டைலில் விறுவிறுவென நடந்து சதாபிஷேக விழா மண்டபத்திற்குள் சென்றார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோரும் இல. கணேசன் சகோதரர் சதாபிஷேக விழாவில் பங்கேற்றனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கட்சி பேதமின்றி இல. கணேசன் சகோதரர் சதாபிஷேக விழாவில் பங்கேற்றுள்ளனர்.