பாக்கிய லட்சுமிக்கு இந்த கூல் ட்ரிங்க்ஸ்தான் பிடிக்குமாமே...அடடே ரவி ஏமாந்துட்டானே!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல், குஷ்பூ வேற எலெக்ஷன் முடிஞ்சு வந்துட்டாங்களா.. சகுந்தலா தேவிக்கும், மகாலட்சுமிக்கும் போட்டியா சீரியல் போயிகிட்டு இருக்கு.
எது எப்படி இருந்தா என்னன்னு பாக்கியலட்சுமி, ரவி ரொமான்ஸ் ஒரு புறம் ஜோராவே போயிகிட்டு இருக்கு. டாக்டர் உமா ரவியின் சின்ன அண்ணி, அவங்களுக்கு பாக்யலட்சுமியை கண்டாலே பிடிக்காது.

பாக்கியலட்சுமி அண்ணியும், அவங்க தங்கச்சியும் கடைக்கு வந்து அதிரடியா புடவை கேட்கறாங்க. சும்மா எல்லாம் தர கூடாது அண்ணி, வேணும்னா என்கிட்டே இருக்கற காசுல ஒரு புடவை எடுத்து தரேன்.. பிடிச்சதை எடுத்துக்கோங்கன்னு சொல்றா லட்சுமி.

அதுக்குள்ளே அண்ணியோட தங்கச்சி, ஒரு பட்டு புடவையை சுட்டு, பேக்ல வச்சுக்கறா. இதை வீடியோ எடுத்து, குஷ்பூகிட்ட போட்டு காமிக்கறாங்க. உடனே ரவி ஒரு வீடியோ காமிக்கறான். அதுல பாக்கியலட்சுமி தன் அண்ணி தங்கச்சி திருடிய புடைவையை கண்டு பிடிச்சு, திட்டிட்டு வாங்கிக்கறது.

மொட்டை மாடியில் போயி பாக்கியலட்சுமி அழுதுகிட்டு இருக்கா. அங்கே ரவி வந்து, ஆறுதல் சொல்லி, அவள் கண்களை துடைச்சு விடறான். உனக்கு நான் இருக்கேன் லட்சுமின்னு சொல்ல, ஓடிப் போயிடறா லட்சுமி.
ரவி மேங்கோ ஃப்ரூட்டியோட வர்றான். ஐ... ஃப்ரூட்டி எனக்கு குடுங்க ரவி ரொம்ப பிடிக்கும்னு சொல்றா. அவன் அந்த பாட்டிலுக்கு அடியில் 5 ரூபாய் காயின் வச்சுட்டு, பாட்டிலை கையில தொடாம காயின் எடுங்க, இது உங்களுக்குத்தான்னு சொல்றான் ரவி.

லட்சுமி மந்திரம் போடுவது போல போட்டு, கையில் காயின் இருக்கேன்னு சொல்றா. எப்படி இருக்கும், நான் பாட்டிலுக்கு அடியிலதானே வச்சேன். எப்படி உன் கைக்கு வந்துச்சுன்னு கேட்டு, பாட்டிலை எடுக்கறான். உடனே அடியில இருந்த காயினை எடுத்துக்கிட்டா லட்சுமி.. இதோ.. இப்போ வந்துருச்சு பாருங்கன்னு சொல்லிட்டு ஃப்ரூட்டியை பிடுங்கிக்கறா.

வெள்ளிக்கிழமை பூஜை போடறாங்க லட்சுமி ஸ்டோரேஸ்ல.அப்போ பூஜை முடிஞ்சதும், எல்லாருக்கும் டிரேயில ஃப்ரூட்டி எடுத்துட்டு வந்து குடுக்கறா லட்சுமி. என்னது எல்லாருக்கும் ஃப்ரூட்டி குடுக்கறீங்கன்னு கடைக்கு வந்த ஒரு பெண்மணி கேட்க, இன்னிக்கு வெள்ளிக்கிழமை பூஜை போட்டுட்டு, வந்தவங்க மனமும் வயிறும் குளிர திருப்தியா போகணும்னு நாங்க எல்லாருக்கும் ஃப்ரூட்டி குடுக்குறோம்ன்னு சொல்றா லட்சுமி.

இதே போல கண்மணி சீரியலிலும் ஃப்ரூட்டி வாங்கிக் குடுத்து, முத்துச்செல்வி தன் கல்யாண நிச்சயமானதை கொண்டாடறதுன்னு காட்சிகள் அமைச்சு இருக்காங்க.

விளம்பரத்தில் இது புதுசா இருக்கு. காட்சியோடு திணிச்சு, விளம்பரத்தை சொல்றது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications