சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாற்காலியில் இளையராஜா.. தரையில் லட்சுமி ராமகிருஷ்ணன்.. "சமத்துவம்" கிளம்பியது சர்ச்சை! நடிகை பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: இசைஞானி இளையராஜா முன்பு லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்த விவகாரத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவற்றிற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

    Ilayaraja Unknown Facts |Ilayaraja பற்றி அறியாத சுவாரஸ்ய தகவல்கள் | #Celebrity |Filmibeat Tamil

    தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் இயக்குநரும் கூட! ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய 4 படங்களை இயக்கியிருந்தார்.

    மேலும் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி ஷோவையும் நடத்தி பிரபலமானார். அதில் தவறிழைத்தவர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்குவார். இந்த நிலையில் சமுத்திரகனியை நாயகனாகவும் மிஷ்கினை வில்லனாகவும் வைத்து தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

    எம்.பி.யாகி முதன்முறையாக.. மேடையில் ஏறி சரசரவென தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா.. ஒரே நெகிழ்ச்சி எம்.பி.யாகி முதன்முறையாக.. மேடையில் ஏறி சரசரவென தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா.. ஒரே நெகிழ்ச்சி

     இசை பணி

    இசை பணி

    இந்த படத்தின் இசை பணிகளுக்காக இசைஞானி இளையராஜாவை லட்சுமி ராமகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது இளையராஜா நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஆர்மோனியத்தில் டியூன் போட்டுக் கொண்டிருந்தார். இதை கீழே தரையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

    சமூகவலைதளங்கள்

    சமூகவலைதளங்கள்

    இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் தனக்கு இணையாக நாற்காலியில் யாரையும் உட்கார வைக்க மாட்டாரா இளையராஜா? சக மனிதர்களுக்கு மதிப்பளிக்க தெரியாத நபராக இருக்கிறாரே என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

     தரையில் ஏன்

    தரையில் ஏன்

    நெட்டிசன் ஒருவர், "தரையில் ஏன் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்! தன்னை தேடி வரும் விருந்தாளிகளுக்கு நாற்காலி கூட வாங்கி போட முடியாத அளவுக்கா இளையராஜா ஏழை? இதை பார்ப்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது. இளையராஜா எங்கு சென்றாலும் மரியாதையை எதிர்பார்ப்பார். அதே மரியாதையை அவர் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்" என்றார்.

     இளையராஜா கடவுள்

    இளையராஜா கடவுள்

    இதற்கு லட்சும ராமகிருஷ்ணன் பதிலளிக்கையில் இளையராஜா கடவுளுக்கு சமமானவர். அவர் காலடியில் உட்கார்ந்திருப்பதை நான் ஆசிர்வாதமாக கருதுகிறேன். அவர் இருக்கும் இடத்திற்கு செல்லும்போதெல்லாம் இப்படியே உட்கார ஆசைப்படுகிறேன். மேலும் தரையில் உட்காருவது உடலுக்கு நல்லது என விமர்சனங்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். தரையில் உட்காருவது நல்லதுதான், அதற்காக அவரை ஏன் கடவுள் என்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    English summary
    Actress Lakshmy Ramakrishnan gives befitting reply for criticism on Ilayarajaa as she sit in floor in his office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X