லலிதா ஜுவல்லரி கொள்ளை.. தொடர்ந்து டிமிக்கி கொடுக்கும் முருகன்.. உறவுக்கார பெண் அதிரடி கைது!
Recommended Video
சென்னை: லலிதா ஜுவல்லரி கொள்ளையின் மாஸ்டர் மைண்ட் முருகனின் உறவுக்கார பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையின் மாஸ்டர் மைண்ட் முருகன் தலைமறைவாகி இருக்கிறார். இன்னொரு முக்கிய குற்றவாளி மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார் .

என்ன உறவினர்
இந்த நிலையில் முருகனின் உறவினர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இன்று காலை முருகனின் இன்னொரு உறவினரான ராஜேஸ்வரி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் திருவாரூர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி நெருக்கம்
முருகனுக்கு மிகவும் நெருக்கமான உறவினர் இவர். இவரை தற்போது போலீசார் தீவிரமாக விசாரித்துள்ளனர். முருகன் அடிக்கடி இந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

எத்தனை பேர்
இதுவரை முருகனின் உறவினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் 2 பேர் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நான்கு பேரிடம் இருந்து கொஞ்சமான நகைகளையே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

நகை எங்கே
ஆனால் 30 கிலோ நகையில் இன்னும் முழுதாக எல்லா நகையும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதிக அளவு நகையை முருகன்தான் மறைத்து வைத்துள்ளார். அவரை கைது செய்தால், நகைகளை மீட்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது எவ்வளவு மொத்தம்
இந்த திருட்டு தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் கொள்ளையர்கள் என்று பார்த்தால் 2 பேர்தான். மற்ற எல்லோரும் கொள்ளையர்களின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவுக்குள் முருகன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications