சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லலிதா ஜூவல்லரி கொள்ளையன் முருகன் சீரியஸ்.. உயிருக்கு போராடுகிறாராம்.. தீவிர சிகிச்சை!

லலிதா ஜுவல்லரி முருகன் சிறையில் உயிருக்கு போராடி வருகிறாராம்

Google Oneindia Tamil News

சென்னை: எய்ட்ஸ் வந்ததாக சொல்லப்பட்ட கொள்ளையன் முருகனுக்கு உடம்பு சரியில்லையாம்.. உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Recommended Video

    Lalitha Jewellery robbery Murugan பக்கவாதத்தால் பாதிப்பு

    கடந்த வருடம் அக்டோபர் மாதத்தை மறக்கவே முடியாது.. மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும்வகையில் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கைவரிசையை காட்டியவர்தான் முருகன்.

    திருவாரூர் முருகன் என்றால் ஃபேமஸ்.. கடையின் பின்புற சுவரில் விடிய விடிய ஓட்டையை போட்டு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளையடித்து சென்றார்.

    முருகன்

    முருகன்

    இந்நிலையில் முருகன் உயிருக்கு போராடி வருவதாக ஒரு தகவல் வந்துள்ளது.. ஏற்கனவே முருகனுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதாக சொல்லப்பட்டது.. நடிகைகளுடன் கும்மாளமிட்ட முருகன் எய்ட்ஸ் நோய் வந்து, உடல் மெலிந்து, பற்கள் கொட்டி காணப்பட்டதாகவும், செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை எடுத்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

    வழக்குகள்

    வழக்குகள்

    முருகனுக்கு 4 மாநிலங்களில் ஏகப்பட்ட கேஸ்கள் உள்ளன.. தமிழகம் உட்பட கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் நிறைய கைவரிசைகள் காட்டி உள்ளார்.. இதற்கு முன்பு புகார், வழக்குகளில் சிக்கியிருந்தால், அதில் இருந்தெல்லாம் முருகன் ஈஸியாக தப்பி விட்ட நிலையில், லலிதா ஜுவல்லரி கொள்ளையும், வங்கி கொள்ளையும் வசமாக சிக்க வைத்துவிட்டது.. ஆதாரங்கள் வலுவாக சிக்கி உள்ளன.

    எய்ட்ஸ் நோய்

    எய்ட்ஸ் நோய்

    இந்நிலையில் முருகன் உயிருக்கு போராடி வருவதாக ஒரு தகவல் வந்துள்ளது.. ஏற்கனவே முருகனுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளாக சொல்லப்பட்டது.. நடிகைகளுடன் கும்மாளமிட்ட முருகன் எய்ட்ஸ் நோய் வந்து, உடல் மெலிந்து, பற்கள் கொட்டி காணப்பட்டதாகவும், செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை எடுத்து கொண்டதாகவும் விசாணையில் தெரியவந்தது.

    சிகிச்சை

    சிகிச்சை

    இப்போது பெங்களூர் ஜெயிலில் உள்ள முருகனுக்கு கை, கால் செயலிழந்து விட்டதாம்.. உடல்நிலை மோசமாகி விட்டதாக தெரிகிறது.. இது முருகனின் குடும்பத்தினரை கவலைக்குரியதாக்கி உள்ளது.. தனியார் ஆஸ்பத்திரியில் முருகனுக்கு சிகிச்சை தர முடிவு செய்துள்ளனர்.. அதற்காக அவரை ஜாமீனில் எடுப்பதற்காக திருச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனராம். இந்த வழக்கு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

    English summary
    lalitha jewellery thief thiruvarur murugan suffering with illness in bengaluru jail
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X