நிலம் உள்ளோருக்கு ஹேப்பி.. மொத்த வசதியும் ஓரிடத்தில்.. நில எடுப்புக்கான "பூமி ராசி.. மத்திய அரசு செம
சென்னை: நில உரிமையாளர்கள் பலன்பெறும்வகையில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய இணையதளம் பற்றி தெரியுமா? இந்த பூமி ராசி என்ற இணையதளத்தில் உள்ள எண்ணற்ற வசதிகள்? இதன் முக்கியத்துவம் என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.
நம்முடைய தமிழகத்தில், பொதுமக்களின் வசதிக்காக, எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நிலஅளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், நிலத்தை அளவீடு செய்வதற்கு, விண்ணப்பிப்பதற்காக வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்ல தேவையில்லை. பொதுமக்கள் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கும் நேரில் செலல தேவையில்லை. அனைத்துக்கும் தமிழக அரசின் தமிழ்நிலம் வெப்சைட் உதவுகிறது. இதுபோலவே, நில உரிமையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய இணையதளம்தான் பூமி ராசி.
பூமி ராசி: அதாவது, இந்தியா முழுவதிலும், 1.32 லட்சம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கட்டமைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன... நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உதவுவதற்காகவே, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியதுதான், "பூமி ராசி' என்ற இணையதளம்.
கடந்த 2018ம் ஆண்டிலிருந்து, 3,132 திட்டங்களுக்கு இழப்பீடாக 9,381 கோடி ரூபாய் நில உரிமையாளர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வழங்கப்பட்டுள்ள நிலையில், "பூமி ராசி" (bhoomi rashi portal) என்ற இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, அதில், கூடுதலாக புதிய வசதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இழப்பீடுகள்: அதன்படி, நிலம் கையகப்படுத்துதல் குறித்த சட்டப்பூர்வ நடைமுறைகள், நில உரிமையாளர்களுக்கு விரைவாக இழப்பீட்டு தொகை வழங்குவது, நில உரிமையாளர்களே தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு பட்டுவாடா நிலையை தெரிந்து கொள்வது இப்படி எண்ணற்ற வசதிகளை, இந்த இணையதளம் மூலம் பெற முடியும்.
நிலம் எடுப்பு தொடர்பான மத்திய அரசாணைகள், மத்திய அரசிதழ் பதிவுகளும் இந்த புதிய வெப்சைட்டில் இடம் பெற்றுள்ளன.. அதுமட்டுமல்லாமல் புகார்களை பதிவு செய்து, அதன் நிலை குறித்தும் நில உரிமையாளர்கள் அறிந்து கொள்ளவும் முடியும்.
வெளிப்படைத்தன்மை: நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகளும், வெளிப்படைத்தன்மையுடன் இந்த வெப்சைட் மூலம் கையாளப்பட்டு வருகின்றன. இத்தனை அம்சங்களுடன் தயாராகியிருக்கும் "பூமி ராசி" இணையதளமானது, நாட்டு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருவதுடன், பெருமளவு உதவியாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications