நிலம் தானம் செய்யணுமா? ரியல் எஸ்டேட்டில் குடிநீர்த்தொட்டி வைத்தால் புதிய விதியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மனைப்பிரிவு திட்டங்களில் மேல்நிலை குடிநீர்த்தொட்டி அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மற்றும் பூங்கா பகுதிகள் தொடர்பாக புதிய நடைமுறை நிபந்தனைகள் முன்வைக்கப்படுவதால், திட்டங்களின் பதிவு தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தெளிவான சட்டப்பூர்வ நடைமுறையை வகுக்க வேண்டும் என்று பெயிரா சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஹென்றி விடுத்துள்ள கோரிக்கை மனுவில் உள்ளதாவது:

Real Estate Rules TNRERA FAIRA

திறந்தவெளி நிலம் அல்லது பூங்கா பகுதியில் மேல்நிலை குடிநீர்த்தொட்டி அமைக்கப்பட்டிருந்தால், அந்தத் தொட்டி அமைந்துள்ள பரப்பளவுக்கு இணையான அளவு விற்பனைக்குரிய நிலத்தை அதே மனைப்பிரிவில் தனியாக ஒதுக்கி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும் என்று வாய்மொழியாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நிலத்தை தானமாக வழங்கியதற்கான ஆவணத்தை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் சமர்ப்பித்த பிறகே திட்டப் பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறையும் கூறப்படுகிறது.

இந்த நிபந்தனைக்கு எந்த சட்டப்பிரிவு, அரசாணை அல்லது விதிமுறை அடிப்படையாக உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இப்படியொரு விதிமுறை இருந்தால் அதன் சட்டப்பூர்வ ஆதாரத்தை சுட்டிக்காட்ட வேண்டும். விதிமுறை இருந்தால் அதை முழுமையாகப் பின்பற்றத் தயாராக உள்ளோம்.

இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 21-ம் தேதியே தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தெளிவான எழுத்துப்பூர்வமான விளக்கம் கிடைக்காமல், பல திட்டங்களின் கோப்புகள் நிலுவையில் உள்ளன.
ஒரு திட்டத்தின் பதிவு தாமதமாவது வங்கிக் கடனுக்கான வட்டி சுமை அதிகரிப்பு, முதலீடு முடக்கம், திட்டச் செலவு உயர்வு, வாடிக்கையாளர்களுக்கு மனைப் பதிவு தாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் பாதிப்பு மனை வாங்கும் பொதுமக்களுக்கும் செல்லக்கூடும்.

எனவே, மேல்நிலை குடிநீர்த்தொட்டி அமைப்பதற்கான நில ஒதுக்கீடு, உள்ளாட்சிக்கு நிலத்தை ஒப்படைக்கும் நடைமுறை, ஏற்கனவே அனுமதி பெற்ற திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களுக்கான நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலை வெளியிட வேண்டும்.

சட்டப்பூர்வ ஆதாரம் இல்லாத நிலையில் வாய்மொழி நிபந்தனைகளின் அடிப்படையில் திட்டங்களை நிலுவையில் வைக்கக் கூடாது. நிலுவையில் உள்ள திட்டக் கோப்புகளை விரைந்து ஆய்வு செய்து, சட்டப்பூர்வமான தடையற்ற திட்டங்களுக்கு காலவரையறைக்குள் பதிவு உத்தரவு வழங்க வேண்டும்.

கூடுதல் ஆவணங்கள் அல்லது நிபந்தனைகள் கோரப்பட்டால், அதற்கான சட்டப்பூர்வ காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் அனுமதி பெற்று முதலீடு செய்துள்ள திட்டங்களுக்கு பின்னர் உருவாகும் தெளிவற்ற நடைமுறைகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடைமுறையையும் உருவாக்க வேண்டும்" என்று மனுவில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+