Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வில்லிவாக்கத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு.. சென்னையில் வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக கோயில் நிலம், நீர் நிலைகள், சாலைகள், பாதைகள் போன்றவற்றை ஆக்கிரமித்தவர்கள், நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதன் காரணமாக வெள்ள பாதிப்பு பல இடங்களில் ஏற்பட்டு வருகிறது. சில பகுதிகளில் மக்கள் சுற்றி சென்று வருகிறார்கள். இந்நிலையில் வில்லிவாக்கத்தில் அகத்தீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலம் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது.

சென்னையில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளும், கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் என்று வேண்டுமானாலும் இடிக்கப்படலாம். ஏனெனில் 30, 40 வருடம் முன்பு கோயில் நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களும், நீர் நிலை ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களும் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பள்ளிக்கரணை, வேளச்சேரி, வில்லிவாக்கம், கொரட்டூர், பல்லாவரம், வரதராஜபுரம், குரோம்பேட்டை, தாம்பரம், திருமுல்லைவாயில், திருநின்றவூர், பெருங்களத்தூர், காட்டாங்குளத்தூர் என சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் எங்கு நீர் நிலை ஆக்கிரமிப்பில் வசித்தாலும், சாலைகளை ஆக்கிரமித்து வசித்தாலும், பாதைகளை ஆக்கிரமித்து வசித்தாலும் கண்டிப்பாக சிக்கல் தான்.

land deed

தற்போதைய நிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வசிப்போர் அந்த இடத்திற்கு பட்டா வாங்கவே முடியாத நிலையில் உள்ளார்கள். அதேபோல் பல வருடத்திற்கு முன்பு பத்திரப்பதிவு செய்து வாங்கியவர்கள் மீண்டும் யாருக்கும் அதை விற்கவே முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஏனெனில் அரசு நிலங்களின் வழிகாட்டி மதிப்பை பூஜியம் ஆக்கிவிட்டது. இதன் காரணமாக ஆக்கிரமிப்பில் உள்ள எந்த நிலத்தையும் விற்கவோ வாங்கவோ முடியாது. பல இடங்களில் தற்போது ஆக்கிரமிப்புகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும், குத்தகைக்கு எடுத்து பல வருடமாக காலி செய்யாமல் உள்ளவர்களும் அதிரடியாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். சென்னை வில்லிவாக்கத்தில் அகத்தீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் மு.க.ஸ்டாலின், வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை, வில்லிவாக்கம், அகத்தீசுவர சாமி கோவிலுக்கு சொந்தமாக எம்.டி.எச். சாலை, சிவசக்தி காலனியில் உள்ள 17 ஆயிரத்து 625 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிக மனையானது சக்தி எலக்ட்ரோ பிளேட்டிங் என்று நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

இந்நிறுவனம் நீண்ட நாட்களாக வாடகைத் தொகை நிலுவையில் வைத்திருந்தது. இதனால் சென்னை மண்டலம்-2ல் நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னை உதவி-கமிஷனர் கி.பாரதிராஜா முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும். இந்நிகழ்வின் போது தாசில்தார் (கோவில் நிலங்கள்) திருவேங்கடம், கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+