ஷாக்! கர்நாடகா திறக்கும் தண்ணீர் காவிரியில் மாயம்! ஏமாறும் தமிழகம்? பகீர் தகவல்! அரசு கவனிக்குமா
சென்னை: கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் கர்நாடகா திறந்து விடும் தண்ணீரின் அளவை விட குறைவாகவே தமிழகத்தின் பிலிகுண்டுலுவுக்கு நீர் கிடைக்கிறது. இதனால் தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கி்ல இடையில் பிற பயன்பாட்டுக்கு காவிரி நீர் திருடப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளதால் தமிழக அரசு விசாரிப்பது அவசியம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கர்நாடகா காவிரியில் தண்ணீர் தருவது இல்லை. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தின் கூட்டம் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்தது. அப்போது கர்நாடகா அரசு சார்பில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதைடுத்து உரிய முறையில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடகா அரசோ மழை குறைந்துள்ளதால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை எனக்கூறி குறைந்த அளவில் மட்டும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து வருகிறது. இதனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் மீண்டும் காவிரி நீர் பங்கீட்டு தொடர்பாக இருமாநிலங்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அதன்பிறகு மதியம் 1 மணிக்கு மேல் ஒகேனக்கலில் நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதுஒருபுறம் இருக்க தற்போது காவிரி நீர் விவகாரத்தில் புதிய பிரச்சனை எழுந்துள்ளது.

அதாவது கர்நாடகா அரசு தமிழகத்துக்கு திறந்து விடுவதாக கூறும் தண்ணீரின் அளவுக்கும், தமிழ்நாட்டுக்கும் வரும் தண்ணீரின் அளவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதாவது கர்நாடகா அரசு திறந்து விடும் தண்ணீர் மிக குறைந்த அளவில் மட்டுமே தமிழகத்துக்கு வரும் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தான் தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விடுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கர்நாடகா 86.38 டிஎம்சி தண்ணீர் திறந்து வேண்டி இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை தமிழ்நாட்டிக்கு குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் டெல்டா மாவட்ட பயிர்கள் கருகும் சூழல் உருவாகி உள்ளன.
மேலும் கர்நாடகா அரசு திறந்து விடுவதாக கூறும் தண்ணீரின் அளவுக்கும், தமிழகத்தின் பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கர்நாடகா கூறும் அளவை விட தமிழகத்துக்கு மிகவும் குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் வருகிறது. அதாவது ஆகஸ்ட் 5ல் கர்நாடகா சார்பில் காவிரியில் 10,308 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 5,573 கனஅடி நீர் மட்டுமே வந்தது. மேட்டூருக்கு 299 கனஅடி நீர் மட்டுமே கிடைத்தது.

அதேபோல் ஆகஸ்ட் 10ல் கர்நாடகாவில் இருந்து 10,301 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் பிலிகுண்டுலுவுக்கு 6,853 கனஅடி நீர் மட்டுமே வந்த நிலையில் மேட்டூருக்கு 5,026 கனஅடி நீர் மட்டுமே வந்துள்ளது. மேலும் நேற்று கர்நாடகா சார்பில் 13,290 கனஅடி நீர் திறந்து விட்டது. ஆனால் இன்று காலையில் பிலிகுண்டுலுவுக்கு 3,500 கனஅடி நீர், மேட்டூருக்கு 1,478 கனஅடி நீர் மட்டுமே வந்திருந்தது.
இதனால் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் இடையிடையே வேறு குடிநீர், பாசன திட்டங்களுக்கு உறிஞ்சப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் இந்த பிரச்சனையை அறிந்து கொண்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கர்நாடகாவில் இருந்து திறந்து விடும் தண்ணீர் பிலிகுண்டுலுவுக்கு வரும் வழியில் எப்படி குறைகிறது? என்பதை அறிய தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications