‛‛42 நாளில் 720 பேர் பாதிப்பு’’.. தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு.. சுகாதாரத்துறை ‛வார்னிங்’ கடிதம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 42 நாட்களில் 720 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்வதற்கான அலர்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ தொடங்கி உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 9 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் பலியாகி உள்ளனர்.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கர்நாடகா அண்டை மாநிலமாக இருப்பதாக தமிழக -கர்நாடகா எல்லையில் கண்காணிப்பு என்பது தீவிரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு என்பது ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இந்த வகை கொசுக்கள் நன்னீரில் வாழும் தன்மை கொண்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வரும் சூழலில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அந்த வகையில் கடந்த மே மாதம் 31ம் தேதி வரை தமிழகத்தில் 4 ஆயிரத்து 834 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளள்ளனர். கடந்த 42 நாட்களில் 720 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சார்பில் தமிகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முக்கிய கடிதத்தை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: காய்ச்சல் மற்றும் டெங்கு பரவுவதைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளன. எனவே, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
எல்லையோர மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகளை தடுக்க காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பருவமழை பெய்து வருவதையும், கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிளினிக்குகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். பொது சுகாதாரத்தை உருவாக்கும் வகையில் சிறப்பு தூய்மை முகம் அமைத்து சுத்தம் செய்வதுடன் அது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து காலி இடங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதுடன் கொசு உற்பத்தி ஆகாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பூச்சியில் நிபுணர்களுடன் இணைந்து டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் பரவுவதற்கு வழிவகுக்கும் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதைத் தடுக்க குளோரினேஷனை உறுதிசெய்யவும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களின் வளாகங்கள் ஏடிஸ் கொசு இல்லாத வளாகமாக உருவாக்க வேண்டும். மருத்துவமனைகளில் பிரத்யேக காய்ச்சல் வார்டு உருவாக்கப்பட்டு கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
டெங்குவை கண்டுபிடிப்பதற்கான கருவிகள் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்வதுடன் அவசர காலங்களில் தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பிளேட்லெட் மாற்றத்திற்கான பிளாஸ்மா பிரிப்பான் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதனால் காய்ச்சல், டெங்கு இறப்புகளை தவிர்க்க முடியும். பள்ளி மாணவர்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சுகாதாரக் கல்வி குறித்தும் தங்கள் வீடுகள் மற்றும் வளாகங்களை கொசு உற்பத்தி இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
மட்டன் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. சிங்கப்பூர் ஆய்வு சொல்லும் அந்த 48 சதவீத ஆபத்து இதுதான் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications