Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொஞ்ச நாள்தான் இருக்கு.. ஆதார் - பான் கார்டு இருக்குறவங்க.. உடனே எடுத்துக்கிட்டு போங்க.. முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் - பான் கார்டை இணைப்பதற்கான இறுதி நேரம் நெருங்கி வருகிறது. நவம்பர் 6ம் தேதி முதல் இந்த முறை கட்டாயம் ஆகிறது. டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பான் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் சோதனை செய்யப்படும், வருமான வரி விவரங்கள் சோதனை செய்யப்படும், அதேபோல் உங்கள் பான் கார்டை வைத்து செய்யப்படும் முறைகேடுகள் தடுக்கப்படும்.

நீங்கள் எங்கேயும் லோன் வேண்டும் என்று விண்ணப்பிக்காமலே.. உங்களுக்கு அடிக்கடி லோன் கால் வந்திருக்கிறதா? கிரெடிட் கார்டு இருக்கிறது வேண்டுமா? இதில் முதலீடு செய்கிறீர்களா? என்றெல்லாம் கால் வந்துள்ளதா? அப்படி என்றால் உங்களுடைய பேன் கார்டு தகவல்கள் எங்கேயோ கசிந்து உள்ளன என்று அர்த்தம். கவலை வேண்டாம்.. இனி அதற்கெல்லாம் முடிவு கட்டப்படும்.

aadhaar pan

இந்திய அரசாங்கம் நாடு முழுக்க டேட்டா பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இனி தனியார் நிறுவனங்களால் பான் விவரங்களை சோதனை செய்யும், ஆய்வு செய்யும் முறையை தடை செய்ய உள்ளனர். அங்கீகரிக்கப்படாத முறையில் உங்களின் பான் தகவல்களை யாரும் சோதனை செய்ய முடியாத அளவிற்கு தடை செய்ய உள்ளனர்.

முக்கியமாக பான் அட்டையில் உள்ள கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவருமாறு வருமான வரித் துறைக்கு உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவிட்டுள்ளது.

இனி என்ன நடக்கும்?: இதை எல்லாம் தடுக்கவே பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. நவம்பர் 6ம் தேதி முதல் இந்த முறை கட்டாயம் ஆகிறது. டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பான் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் சோதனை செய்யப்படும், வருமான வரி விவரங்கள் சோதனை செய்யப்படும், அதேபோல் உங்கள் பான் கார்டை வைத்து செய்யப்படும் முறைகேடுகள் தடுக்கப்படும்.

நீங்கள் உங்கள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு உங்கள் பான் கார்டு செயல் இழக்கும். இப்படி இரண்டையும் இணையும் போது உங்கள் பான் கார்டை தேவையின்றி நிறுவனங்கள் எளிதாக ஆய்வு செய்ய முடியாது. இதனால் தனியார் நிறுவனங்கள் உங்கள் பான் கார்டு விவரங்களை அவ்வளவு எளிதாக சோதனை செய்து உங்களுக்கு போன் செய்ய முடியாது.

ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதால் பான் தகவல்கள் கூடுதல் பாதுகாப்போடு இருக்கும். இதனால் ஃபின்டெக் நிறுவனங்கள் மிக எளிதாக உங்களை தொடர்பு கொள்ள முடியாது. ஃபின் டெக் நிறுவனங்கள் முறையாக உங்களிடம் வாங்கிய டேட்டா மூலம் தொடர்ந்து கால் செய்யலாம். ஆனால் உங்களின் பான் விவரங்களை அவர்கள் வேறு வழியில் வாங்கி இருந்தால் அதை பயன்படுத்தி உங்களின் விவரங்களை பெற முடியாது. ஏற்கனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.48 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களிடம் இருந்து மத்திய அரசு ₹600 கோடிக்கு மேல் அபராதமாக வசூலித்துள்ளது. இதுவரை, 11.48 கோடி நிரந்தரக் கணக்கு பான் எண்கள் இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்று நிதித்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்தது.

வருமான வரித் துறையானது நிரந்தர கணக்கு எண்ணை PAN கார்ட் என்ற பெயரில் எல்லோருக்கும் வழங்கி வருகிறது. நம்முடைய அனைத்து வங்கி, பண பரிவர்த்தனைகளை கணக்கில் எடுக்க, கண்காணிக்க, அலச இந்த பான் எண் அவசியம் ஆகும்.

இதை வங்கி கணக்குடன் கட்டாயமாக இணைக்க வேண்டும். அதே போல் ஆதார் அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. இது ஒரு தனித்துவமான 10 இலக்க எண்ணெழுத்து எண்ணாகும். அனைத்து வரி செலுத்துவோருக்கும் பான் கார்டு கட்டாயம்.

பான் கார்டு முக்கியம்: நாம் வைத்து இருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது.

நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த விதிமுறை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+