விடைபெற்றார் நடிகர் டெல்லி கணேஷ்.. சென்னையில் உடல் தகனம் செய்யப்பட்டது.. ரசிகர்கள் கண்ணீர்
சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் இரவு காலமானார். டெல்லி கணேஷின் உடலுக்கு நேற்று திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். இன்று அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயாணாத்தில் டெல்லி கணேஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் டெல்லி கணேஷ். நேற்று முன்தினம் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது இவரது உயிர் பிரிந்தது. உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக டெல்லி கணேஷ் காலமானார். இவருக்கு வயது 80.

சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததும், அதற்காக சிகிச்சைகளையும் பெற்று வந்துள்ளார். அவ்வப்போது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். அப்போது மாத்திரைகள் கொடுப்பதற்காக அவரை எழுப்பியபோது அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் டெல்லி கணேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
டெல்லி கணேஷ் மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். நேற்று சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் டெல்லி கணேஷ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை பலரும் டெல்லி கணேஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவரும், நடிகருமான விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் அவருடன் நடித்த பல திரை நட்சத்திரங்கள் டெல்லி கணேஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயாணத்தில் டெல்லி கணேஷ் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இதற்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டில் டெல்லி கணேஷின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை சார்பிலும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தேசியக் கொடி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து, டெல்லி கணேஷ் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. சென்னை நாமாபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் உடல் எடுத்து செல்லப்பட்டது. வழி நெடுகிலும் அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். தொடர்ந்து மதியம் 12 மணியளவில் டெல்லி கணேஷ் உடல் மின் மயாணத்தில் தகனம் செய்யப்பட்டது.
-
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications