சவுந்தர்யாவுக்கு பிப்.11ல் 2வது டும்டும்... பாதுகாப்பு கேட்கும் லதா ரஜினிகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமது இளைய மகள் சவுந்தர்யா திருமணத்திற்கு பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவருக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அஸ்வின் - செளந்தர்யா இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் அதிகாரப்பூர்வமாக விவகாரத்தும் ஆனது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார்.

2வது திருமணம்

2வது திருமணம்

சில மாதங்களுக்கு முன்பாக செளந்தர்யாவுக்கு 2வது திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியானது. விசாகன் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன், அமெரிக்காவில் படித்தவர்.

மறுமணம் செய்ய முடிவு

மறுமணம் செய்ய முடிவு

வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளதோடு, தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். அவரும் திருமணமாகி விவகாரத்தானவர். அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யாவின் முதல் திருமணம் பிரிவில் முடிந்த காரணத்தால் மறுமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

போயஸ் கார்டனில் திருமணம்

போயஸ் கார்டனில் திருமணம்

அதன்படி சவுந்தர்யாவுக்கும், நடிகரும், தொழிலதிபருமான விசாகனுக்கும் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரும் 10 மற்றும் 12ம் தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் திருமணம் நடைபெற்ற உள்ளது.

பாதுகாப்பு கேட்டு கடிதம்

பாதுகாப்பு கேட்டு கடிதம்

அதில் திரைப் பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். எனவே, உரிய பாதுகாப்பு வழங்கும் படி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் லதா ரஜினி காந்த் மனு ஒன்றை அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+