அப்போ துர்கா ஸ்டாலின்.. இப்போ ஸ்ட்ரைட்டா ஜனாதிபதி.. லதா ரஜினிகாந்த் எங்கையோ போயிட்டாரே
சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்திப்பு நடத்தியுள்ளனர். குடியரசுத் தலைவர் டெல்லி புறப்படும் முன்பாக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசியுள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை மாலை சென்னை வந்தார். சென்னை வந்து சேர்ந்த குடியரசுத் தலைவரைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த வரவேற்பில் மணிமேகலை நூலின் ஆங்கிலப் பாதிப்பை குடியரசுத் தலைவருக்குத் தமிழக முதல்வர் வழங்கினார். பின்பு சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.

இதனையடுத்து குடியரசு தலைவர் திரவுபதி, கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். பிறகு அவர் டெல்லி திரும்பும் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், குடியரசு தலைவரை நேரில் சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்தார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார் லதா ரஜினிகாந்த். அப்போது பிரபல நடிகர் ஒய்.ஜி மஹேந்திரன், மூத்த நடிகை டாக்டர் வைஜந்தி மாலா உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர். மற்றும் ஜேப்பியார் குழும நிறுவனங்களின் தலைவர் ரெஜினா முரளி அவர்களும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற நவராத்திரி கொலு பூஜையில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் சகோதரி செல்வி, நடிகர் விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர், நடிகைகள் மீனா, லதா உள்ளிட்டோர் பூஜையில் கலந்துகொண்டனர்.
அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் பூஜையில் பங்கேற்றனர். ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வெளிமாநிலத்தில் இருப்பதால், அவர் பூஜையில் பங்கேற்கவில்லை. ரஜினிகாந்தின் மனைவி, மகள்கள், பேரன்கள் பூஜைக்கு வந்தவர்களை வரவேற்றனர். அரசியல் பாகுபாடு இன்றி அனைவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார் லதா ரஜினிகாந்த். இந்த நிலையில் தற்போது சென்னை வந்த குடியரசுத்தலைவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசியுள்ளார் லதா ரஜினிகாந்த்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications