விஜய் சிஎம் ஆயிட்டாரு.. தனுஷ் அரசியலுக்கு வர போறாரு! அப்போ ரஜினி? சட்டென லதா ரஜினிகாந்த் சொன்ன பதில்
சென்னை: மக்கள் இயக்கம் மூலமாக கிராமங்கள் தோறும் பெண் குழந்தைகளுக்கான கல்வி, விவசாயிகளுக்கான விவசாயம், நிலம் குறித்து ஏற்படுத்தும் வகையில் மக்கள் இயக்கம் ஒரு வளர்ச்சியை முன்னெடுத்துள்ளதாகவும், இது அரசியலுக்கான தளம் அல்ல என நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு பகுதியில் மக்கள் இயக்கம் சார்பில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் மக்கள் இயக்கத்தின் நிறுவனரான லதா ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மக்கள் இயக்கம் சார்பில் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், யோகா, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த்," தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கிராமங்களில் தங்களுடைய இயக்கம் சார்பில் பெண் குழந்தைகளுக்கான கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயம் குறித்து விழிப்புணர்வு விவசாய நிலம் குறித்து விழிப்புணர்வு போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தங்களது நோக்கம். அதனை செயல்படுத்தும் முறையில் மக்கள் இயக்கம் புதிய முன்னெடுப்பு எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 38 மாவட்களில் 6 மாவட்டங்களை ஒரு மண்டலமாக பிரித்து கிராம்புற பெண் குழந்தைகள் கல்வி, விவசாயிகளுக்கான விவசாய பயிற்சி போன்றவற்றை செயல்படுத்த போகிறோம்.
மக்கள் மேடையின் நோக்கம் பெண்களின் வளர்ச்சிக்காக கைவினை பொருட்கள் பயிற்சி மற்றும் விற்பனை கூடங்களை ஏறப்டுத்த திட்மிடபட்டு செயல்முறையில் உள்ளது. கிராமப் புறங்களில் அதனை விரிவுபடுத்த உள்ளோம். ஒவ்வொருகிராம புறங்களிளும் மக்களின் தேவையை.. எவ்வாறு மக்கள் ஒன்று கூடி பிரச்சனைகளை கையாள வேண்டும், நாட்டுபற்றை கற்று கொடுப்பதே மக்கள் மேடையின் திட்டம்.
மக்கள் இயக்கம் கட்சியாக உருவெடுக்குமா என கேள்வியை எழுப்பிய நிலையில், இது அரசியலுக்கான தளம் அல்ல.. மக்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் விவசாயிகளுக்கும், கைவினை பொருட்களுக்கான வளர்ச்சியை கொண்டு வருவதே மக்கள் மேடை நோக்கம். மக்கள் மேடையை மக்களிடம் அறிமுகப்படுத்தி மக்களின் தேவையை பூர்த்தி செய்வதே எங்களின் நோக்கம்" என தெரிவித்தார்.
முதல்வர் விஜய் குறித்தும், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த லதா ரஜினிகாந்த்," அந்த வார்த்தையை என்னிடம் வாங்கலாமா என பார்க்கிறீர்கள்.. அனைத்துக்கும் எனது பதில், இது அரசியல் இயக்கம் இல்லை.. மக்களுக்கான தளம் தான்" என்றார்.


Click it and Unblock the Notifications
