தமிழ்நாட்டில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை.. சட்டம் ஒழுங்கு அடியோடு போச்சு.. கொந்தளித்த எடப்பாடி
சென்னை: கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், நேற்று சென்னை கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற 2 போலீஸ்காரர்களை அந்த கஞ்சா நபர் கற்களை வீசி கொடூரமாகத் தாக்கினார். பிடிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல், கும்பகோணத்தில் அரசு பேருந்து ஓட்டுரை கஞ்சா போதையில் சில இளைஞர்கள் காலால் மிதித்து கொடூரமாக தாக்குவது போன்ற வீடியோவும் இணையத்தில் பரவியது. இந்த நிலையில் தமிழகத்தில் போலீசார், அரசு ஊழியர்கள் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர்களால் தாக்கப்படுவது மிகுந்த கவலையளிப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.
அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதாக பத்திரிக்கையாளர்களும் பொதுமக்களும் என்னிடத்தில் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த போதைப்பொருட்கள் புழங்குவது மிகுந்த கவலையளிப்பதும் , கண்டணத்துக்கு உரியதாகும். சீர்கெட்டு போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று, சென்னை கண்ணகி நகர் பகுதியில் சுனாமி நகர் குடியிருப்பின், 64 ஆம் பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி உமாபதி. கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் வீடு திரும்பியிர்ந்தார். ஆனால் வெளியே வந்ததும் மீண்டும் அப்பகுதியில் 2 இளளைஞர்களை கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் கண்ணகி நகர் போலீஸ்காரர்கள் 2 பேர் உமாபதியை பிடித்து கைது செய்ய சென்றனர். அப்போது அந்த ஆசாமி போலீசாரையே தாக்கினர். கீழே கிடந்த கற்களை எடுத்து போலீசார் மீது வீசி தாக்கியுள்ளார். அவரது கூட்டாளியும் சேர்ந்து போலீசாரை கொடூரமாகத் தாக்கினர். இந்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தான் இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications