• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"லீக் ஆன வீடியோ".. அதிர்ந்த எம்.பி.. அறிவாலயத்துக்கு பறந்த புகார்.. டக்குன்னு கோதாவில் குதித்த பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: "நான் ஒருத்தன்தான், நம்ம கட்சிக்காரர்கள் மணல் அள்ளட்டும் என்று சொன்னேன்" என்று திமுக எம்பி ராஜேஷ் குமார் பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. இந்நிலையில், இந்த வீடியோவுக்கு சம்பந்தப்பட்ட எம்பி மறுப்பு தெரிவித்து, விளக்கம் தந்துள்ளார்..!
நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் கேஆர்என் ராஜேஷ்குமார்... இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவியில் உள்ளவர்.

இப்போது, திமுக உட்கட்சி தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது... நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டாக செயல்பட்டு வருகிறது.

பாருங்க நம்ம மனுஷங்க பண்ண வேலைய.. செவ்வாய் கிரகத்தையும் குப்பையாக்கிட்டாங்க பாஸ்.. 7 ஆயிரம் கிலோவாம் பாருங்க நம்ம மனுஷங்க பண்ண வேலைய.. செவ்வாய் கிரகத்தையும் குப்பையாக்கிட்டாங்க பாஸ்.. 7 ஆயிரம் கிலோவாம்

 லீக் ஆன வீடியோ

லீக் ஆன வீடியோ

இதில், கிழக்கு மாவட்ட திமுகவில் மறுபடியும் ராஜேஷ்குமார் தான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.. காரணம், இவரது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில்தான், திமுக கடந்த முறை பெருவாரியான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.. இதுபோக, மேலிட சிபாரிசும் இவருக்கு உள்ளதால், இவரை எதிர்த்து ஒருத்தரும் வேட்பு மனு தாக்கல் கூட செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், இவர் பேசியதாக ஒரு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 மணல் அள்ளுங்க

மணல் அள்ளுங்க

அந்த வீடியோவில், "மணல் அள்ளக்கூடாது என்று கேபி ராமசாமி நிறுத்திட்டார்.. எந்த மாவட்டத்திலும் எந்த மாவட்ட செயலாளரும் இப்படி கூப்பிட்டு மணல் அள்ளுங்க என்று சொன்னதே கிடையாது... ஆனால், நான் ஒருத்தன் தான் அப்படி சொன்னேன்... மீதி எல்லாம் அந்த கம்பெனிக்காரன் கிட்ட கொடுத்துட்டு பணம் வாங்கிட்டு போகிறார்கள்.. நான் ஒருத்தன் தான் கட்சிக்காரங்க எல்லாம் சேர்ந்து செய்யுங்க என்று கட்சிக்காரங்க கையில இத கொடுத்தேன்" என்று பேசியுள்ளார்.. இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை திமுக தரப்புக்கு ஏற்படுத்தி வருகிறது.

 அள்ளாதீங்க அள்ளாதீங்க

அள்ளாதீங்க அள்ளாதீங்க

இந்த வீடியோ தொடர்பாக யூகமான தகவல்கள் வட்டமடிக்க துவங்கி உள்ளன.. அதாவது, திமுகவை சேர்ந்த வனிதா செங்கோட்டையன் என்பவர் காக்காவேரி பகுதியில் வழக்கமாக மணல் அள்ளி வந்துள்ளார்.. பிறகு ஆட்சி மாறியதும், மணல் அள்ளக் கூடாது என்று இவரிடம், திமுக மாவட்ட பொறுப்பாளர் சொல்லிவிட்டாராம்.. அத்துடன், திமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளருமான கேபி ராமசாமி என்பவருக்கு மணல் அள்ளுவதற்கான அனுமதியை எம்பி தந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்குள், எம்பிக்குள்ளும், அனிதா செங்கோட்டையன் இடையிலும் மோதல் வெடித்துவிட்டது.. இந்நிலையில்தான் இப்படி ஒரு வீடியோ வெளியானதாக சொல்கிறார்கள்.

 பழைய வீடியோ

பழைய வீடியோ

ஆனால், இந்த வீடியோவுக்கு எம்பி ராஜேஷ்குமார் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.. மணல் அள்ளுவது தொடர்பாக பேசும் இந்த பழைய வீடியோ, உள்நோக்கத்துடன பரப்பப்படுவதாக எம்பி குற்றஞ்சாட்டி உள்ளார்.. தேர்தல் சமயத்தில் இதுபோன்று வேண்டுமென்றே தம்மீது அவதூறு பரப்பப்படுவதாகவும், இந்த வீடியோ குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டுள்ளதாகவும் எம்பி ராஜேஷ் குமார் காட்டமாக கூறியுள்ளார்... எனினும், இதுகுறித்த உண்மைதன்மை என்ன என்று தெரிவதற்கு முன்பேயே, இந்த வீடியோ திமுக தரப்புக்கு சிக்கலை உண்டு பண்ணி வருகிறது.

 கை வைக்கலாமா?

கை வைக்கலாமா?

திமுக ஏதாவது தவறு செய்யுமா? அதை வைத்து அக்கட்சியை டேமேஜ் செய்யலாம் என்று காத்து கிடக்கும் பாஜக + அதிமுகவும் இந்த விஷயத்தை கையில் எடுத்துவிட்டன.. "நானே குற்றமும் செய்வேன்; நானே ஆதாரமும் தருவேன்; நானே இல்லை என்று மறுப்பேன் - இதுதான் இப்போது திமுகவின் மந்திரம்" என்று தமிழக பாஜகவினர் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். யாருமே இயற்கை வளங்களில் "கை" வைக்கக்கூடாது என்பதற்காகத்தான், மணல் அள்ள சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.. அப்படியிருந்தும், ஆளும் தரப்பு மட்டும் மணல் அள்ளலாமா? என்று சமூகஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்..

 ஆன் தி வே

ஆன் தி வே

ராஜேஷ் சொல்வதுபோல, இது பழைய வீடியோவாக இருந்தாலும், ஒரு எம்பியாக இருந்து கொண்டு, கட்சியினரை இப்படியா மணல் அள்ள சொல்வது? என்றும் பரவலாக கேள்வி எழுகிறது.. மெகா பதவி ஒன்று தன்னை தேடி "ஆன்தி வே"யில் வரும்போது, இப்படி தேவையில்லாமல் வாயை கொடுத்து சிக்கி கொண்டுவிட்டாரே என்ற புலம்பல்களும் கிளம்பி உள்ளன.. எனினும், இதுகுறித்த உண்மையை அறிவாலயம் வெளிக்கொணர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்க தொடங்கி உள்ளது..!

English summary
Leaked MP video and controversy speech by dmk mp KRN Rajeshkumar about illegal sand mining
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X