Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவில் சேரலைனு சொன்னாங்களே! அப்போ விருப்பமனு மட்டும் எப்படி? திருவாடானை தொகுதியில் போட்டி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், அதிமுகவில் இணைந்ததாக சமீபகாலமாக ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவர் நேரில் சந்தித்திருந்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் அதிமுகவில் சேர்ந்துவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், இந்த தகவல்களை முற்றிலும் மறுத்த லீமா ரோஸ், அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அவர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லீமா ரோஸ், பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியாக மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும் இருந்து வருகிறார். தற்போது அந்தக் கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

Leema Rose AIADMK Thiruvadanai

லாட்டரி மார்ட்டின் மனைவி

இவர்களின் மகன் ஜோ சார்லஸ், 'லட்சிய ஜனநாயக கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி புதுச்சேரி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா, தவெக (TVK) கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். முன்னதாக, ஜோ சார்லஸ் மற்றும் லீமா ரோஸ் இருவரும் பாஜகவில் செயல்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லீமா ரோஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார்.

அதிமுகவில் லீமா ரோஸ்?

இந்த சந்திப்பின் புகைப்படங்கள் வெளியானதும், அவர் அதிமுகவில் இணைந்ததாக தகவல் வேகமாக பரவியது. சமூக வலைதளங்களில், ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள் என்ற விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், இந்த இணைப்பு குறித்து லீமா ரோஸ் தரப்பிலிருந்தோ அல்லது அதிமுக தரப்பிலிருந்தோ எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அந்த தகவல் உண்மையா, பொய்யா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், லீமா ரோஸ் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்துவிட்டதாக சமூக ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் பரவி வரும் செய்திகள் உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை என விளக்கமளிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

இந்திய ஜனநாயக கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அந்த அடிப்படையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கமான ஒன்று. அதன்படி, 09.01.2026 அன்று, அதிமுக பொதுச் செயலாளரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவருமான எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதனை தவறாகப் புரிந்து கொண்டு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் எனவும் அவர் தரப்பு கூறியது.

திருவாடானை தொகுதி

இதற்கிடையே, பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சமீபத்தில் கோவை வந்திருந்தார். வடவள்ளி பகுதியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அவர் பங்கேற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் லீமா ரோசும் கலந்துகொண்டார். தொடர்ந்து, இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கோவை அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றார். இந்த சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட லீமா ரோஸ் விருப்பமனு தாக்கல் செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல், அவரது அரசியல் நகர்வுகள் குறித்து புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+