இந்த நிமிடம் வரை இல்லை.. ஆதவ் அர்ஜுனா சொன்ன வார்த்தை.. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி உள்ள ஆதவ் அர்ஜுனா அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை ஆதவ் அர்ஜுனா புகழ்ந்த விவகாரம்.. அவர் பேசிய விஷயங்கள் அவருக்கே எதிராக திரும்பி உள்ளன. இதனால் எங்கே ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

actor vijay thirumavalavan vck

இந்த நிகழ்வில் விஜய் திமுகவை பற்றி பேசும் போதெல்லாம் அதை ஆதவ் அர்ஜுனா கைதட்டி வரவேற்றார். அதோடு நிற்காமல் விஜய் பேசி முடித்ததும் அவரை கட்டி அணைத்து பேசினார். அதோடு இல்லாமல் விஜய்க்கு ஆதரவாக.. மன்னராட்சியை ஒழிப்போம் என்றெல்லாம் ஆதவ் அர்ஜுனா பேசினார்

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை ஆதவ் அர்ஜுனா புகழ்ந்த விவகாரம்.. அவர் பேசிய விஷயங்கள் அவருக்கே எதிராக திரும்பி உள்ளன. விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து தற்போது கட்சியில் இருந்தும் வெளியேறி உள்ளார். விஜயுடன் நெருக்கம் என்பதை தாண்டி விஜய்க்கு பொருளாதார ரீதியாக சப்போர்ட் தேவை. அவர் சினிமாவில் சம்பாதித்த தொகையை வைத்து தேர்தலை சந்திக்க முடியாது.தேர்தல் நிதி தேவை. அதோடு தேர்தல் வியூகம் வகுக்க ஆட்கள் தேவை.

இது அனைத்தும் ஆதவ் அர்ஜுனாவிடம் உள்ளது. அவர் நிதி தொடர்பாகவும் சப்போர்ட் செய்ய முடியும்.. ஆலோசனை வழங்கவும் அவரிடம் நிறுவனம் உள்ளது. இதனால் விஜய் உடன் ஆதவ் அர்ஜுனா கைகோர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அறிக்கையில் சொன்னது என்ன?: முன்னதாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.

ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.

இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல "அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்" என்கிற அடிப்பையில் 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.

அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்... என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+