பனையூர் பாபு திருமாவளவனை விட்டுட்டு போனாரே.. இப்ப 4 மாதத்திலேயே திமுகவில் என்ன ஆச்சு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சித் தாவும்போது கிடைக்கும் வரவேற்பும், கட்சியில் இணைந்த பிறகு கிடைக்கும் முக்கியத்துவமும் எப்போதுமே ஒன்றாக இருப்பதில்லை... இதற்கு தமிழக அரசியலில் அவ்வப்போது சில உதாரணங்கள் கிடைத்து வருகின்றன. அந்த வரிசையில், திமுகவில் இணைந்த முன்னாள் விசிக நிர்வாகி பனையூர் பாபுவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இப்போது புதிய அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. இதனால், மீண்டும் விசிக பக்கம் திரும்புவது குறித்தும் அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பனையூர் பாபு, சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

Thirumavalavan

பனையூர் பாபுவுடன் அவரது ஆதரவாளர்கள் 1,200-க்கும் மேற்பட்டவர்களும் விசிகவிலிருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர். அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி, அன்றைக்கு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. விசிக தலைவர் திருமாவளவனின் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து, திமுகவில் இணையும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார் பனையூர் பாபு...

பனையூர் பாபு சொன்ன வார்த்தை

அதுமட்டுமல்ல, திமுகவில் இணைந்ததும் பேட்டியளித்த அவர், "விசில் அடிப்பவர்கள் எல்லாம் தியேட்டருக்குதான் செல்ல வேண்டும், சட்டப்பேரவைக்கு வரக் கூடாது. பெரியார் ஈவெராவும், அம்பேத்கரும் பேசிய அரசியலையும் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர் விஜய் என்று பேசிய திருமாவளவன், இப்போது தவெகவுடன் கைகோக்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாக இருக்கிறது.

விசிக பயணித்துக் வரும் கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல் அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் தலைமையின் கீழ் இனியும் தன்னால் பயணிக்க இயலாது. இது எனது மனசாட்சியை உணர்த்துகிறது என்று திருமாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய பனையூர் பாபு, விசிகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

திமுகவில் என்ன இடம்?

திமுகவில் இணைந்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிவிட்டன.. ஆனாலும், தனக்கும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் உரிய முக்கியத்துவம் திமுகவில் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் பனையூர் பாபுவிடம் வெளிப்படுகிறதாம்.

அவருடன் இணைந்த அவரது ஆதரவாளர்களோ, "திமுகவில் இணையும்போது எங்களுக்கு நீங்கள் கொடுத்த உத்தரவாதம் எதுவும் நடப்பது மாதிரி தெரியவில்லை தோழர்... திமுகவில் நமக்கான இடம் என்ன? " என்று கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.

பழைய முக்கியத்துவம்

அவர்களுக்கு பதில் சொல்லும் பாபு, "எனக்கும் ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் நாள் பொறுத்திருங்கள். அரசியல் ரீதியாக என்ன முடிவு எடுக்கலாம் என ஆலோசிப்போம்" என்று சமாதானப்படுத்தி வருகிறாராம். திமுகவில் தங்களுக்கான உரிய இடம் கிடைக்கவில்லையென்றால், மீண்டும் விசிகவிற்கே திரும்பிவிடலாம் என்றும் யோசிக்கிறார்கள் திமுகவில் இணைந்த பனையூர் பாபுவின் ஆதரவாளர்கள்.

உடனே இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விசிக நிர்வாகிகள், "பனையூர் பாபுவின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, பனையூர் பாபுவே விசிகவுக்கு திரும்ப முடிவெடுப்பார். ஆனால், அப்படி இணைந்தால் முந்தைய முக்கியத்துவம் எதுவும் விசிகவில் அவருக்கு கிடைக்காது" என்கிறார்களாம்.

டிட்டோ அதிமுக

எப்போதுமே அரசியலில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குச் செல்வது மட்டுமே அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்துவிடாது. அங்கு தங்களுக்கான அங்கீகாரமும், பொறுப்பும், உரிய முக்கியத்துவமும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சித் தாவி வருபவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதிமுகவிலிருந்து தவெகவுக்கு சென்ற முக்கிய நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களிடமும் இதுபோன்ற ஆதங்கங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், திமுகவில் இணைந்த பனையூர் பாபு தரப்பிலும் அதே நிலை ஏற்பட்டிருப்பது தமிழக அரசியலின் எதார்த்தத்தை உணர்த்துகிறது....!!!

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+