வாரிசு சான்றிதழ்.. ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா? இந்த ஆவணங்கள் எல்லாம் உங்ககிட்ட ரெடியா இருக்கா?
சென்னை: வாரிசு சான்றிதழ் எதற்கெல்லாம் தேவைப்படும்? இந்த சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் தெரியுமா?
ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டால் அவரின் சொத்துக்களை அல்லது பணத்தை பெறுவதற்கு பெறப்படும் சான்றிதழ்தான் வாரிசு சான்றிதழ். இது வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது.

இப்படி வாரிசு சான்றிதழ்கள் இருந்தால், எந்த பிரச்சனையும் சொத்து தொடர்பாக வராது.. வாரிசுகள் அந்த சொத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.. வாரிசுகளுக்குள் தகராறு வரவும் வாய்ப்பிருக்காது....
ஆவணங்கள்: ஆனால், இந்த வாரிசு சான்றிதழை எல்லாராலும் பெற்றுக்கொள்ள முடியாது.. இறந்த நபரின் கணவன் அல்லது மனைவி, இறந்த நபரின் வாரிசுகள், இறந்த நபரின் பெற்றோர் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்..
இந்த சான்றிதழ் இருந்தால்தான், ஓய்வூதியம் பெற முடியும், PF, கிராஜுவிட்டி பெற முடியும்.. கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற முடியும்.. அதுமட்டுமல்ல, நேரடியாக இவருக்குதான், தாம் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும்கூட, சொத்துக்கள், உரிமைகள் விஷயத்திற்கு இந்த சான்றிதழ் மிகவும் முக்கியமானதாக உள்ளது..
இந்த வாரிசு சான்றிதழை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட பகுதியின் நகராட்சி அலுவலகம்/தாலுகா அலுவலகம் அல்லது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.. பெரும்பாலும் வட்டாட்சியரே இந்த சான்றிதழை வழங்கிவிடுவார்.. வாரிசு சான்றிதழ் கோருபவருக்கு உள்ள உறவு நிலை, குடும்ப உறுப்பினர்கள், சட்ட சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து இந்த சான்றிதழை வழங்குவார்.

ஆன்லைன் முறை: இப்போது, ஆன்லைனிலேயே விண்ணப்பித்து, இந்த வாரிசு சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு, www.tnesevai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று, முதலில் நீங்கள் ரிஜிஸ்தர் செய்து கொண்டு, அதற்கு பிறகு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சில ஆவணங்கள் முக்கிய தேவையாக இருக்கின்றன..
ஆவணங்கள்: குறிப்பாக, சுய உறுதிமொழிப் பத்திரம், ஆதார் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், உரிமம், செல்போன் பில், டெலிபோன் பில், சமையல் கேஸ் பில், பிறப்புச் சான்றிதழ், பள்ளியிலிருந்து தருப்படும் டி.சி., இறந்த நபரின் இறப்பு சான்றிதழ், இறந்த நபரின் அட்ரஸ் ஆதாரம் போன்றவை இருந்தால்தான், வாரிசு சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.












Click it and Unblock the Notifications